உத்தராகண்ட் மாநில நிதி அமைச்சர் பிரகாஷ் பந்த் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

58 வயது ஆகும் பிரகாஷ் பந்த் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 



அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திரசிங் ராவத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


முன்னதாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரகாஷ் பந்த் கடந்த பிப்ரவரி மாதம் மாநிலத்தில் நடைப்பெற்ற பட்ஜட் கூட்டத்தொடரில் இருமுறை சுயநினைவின்றி மயங்கி விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பின்னர் பட்ஜட் தொடரில் அவர் பங்கேற்கவில்லை எனவும், பட்ஜட் உரையை முதல்வர் திரிவேந்திர சிங் படித்தார் எனவும் தெரிகிறது.



மறைந்த பிரகாஷ் பந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாநிலத்தில் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.


உத்ரகண்ட் சட்டமன்றத்தின் முதல் சபாநாயகராக இருந்த பிரகாஷ் பந்த், சுற்றுலா, கலாச்சாரம், பாராளுமன்ற விவகாரம் துறைகளில் அமைச்சராக பொருப்பேற்று சிறப்பாக செயலாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.