புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தின் சாமோலி பிராந்தியத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜோஷிமத்தில் நந்தா தேவி பனிப்பாறை வெடித்ததைத் தொடர்ந்து பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் பல ஏஜென்சிகளின் மீட்பு நடவடிக்கைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ANI இன் அறிக்கையின்படி, தபோவனின் தௌலிகங்காவில் நடந்த மீட்பு நடவடிக்கையில் இதுவரை 8 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. என்டிபிசி ஆலையில் பணியாற்றும் 148 தொழிலாளிகள் மற்றும் ரிஷிகங்காவில் 22 பேர் என இன்னும் 170 பேரை இன்னும் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.


இந்த சம்பவம் 2013 ஆம் ஆண்டின் கேதார்நாத் வெள்ளத்தை (Flood) நினைவுபடுத்தும் வகையில் இருந்தது. அந்த வெள்ளம் காரணமாக, சுற்றுச்சூழல் ரீதியாக ஏற்கனவே பலவீனமாக உள்ள இமயமலைப் பகுதியில் பரவலான பேரழிவு ஏற்பட்டது. 2013 ஆம் ஆண்டு ஜூன் 16-17 தேதிகளில் கேதார்நாத்தில் அதுவரை யாரும் காணாத அளவிற்கு பெய்த மழை ஒரு பெரும் இயற்கை பேரழிவின் உருவத்தை எடுத்தது.


ஆனால், கேதார்நாத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணம் அப்போது பெய்த பலமான மழையாகும். அதுபோலல்லாமல், ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெள்ளம் ஒரு பிரகாசமான, சூரியன் ஒளிவீசிக்கொண்டிருந்த காலைப் பொழிதில் ஏற்பட்டுள்ளது.


ALSO READ: உத்திரகாண்டில் வெடித்தது பனிப்பாறை.. 2013 போன்ற பேரழிவை நோக்கி செல்கிறதா..!!


பனிப்பாறை (Glacier) உடைந்ததே இந்த வெள்ளத்திற்கான காரணமாகும். மழை இல்லாததால், காவல்துறை, மாநில பேரிடர் மேலாண்மைப் படை (SDRF), தேசிய பேரிடர் மேலாண்மைப் படை (NDRF) மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (ITBP) ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளைத் தடையின்றி செய்ய முடிகின்றது.


இதற்கிடையில், SDRF உறுப்பினர்கள் மந்தாகிணி ஆற்றின் நீர் அளவு குறையக் காத்திருக்கிறார்கள். நீரின் அளவு குறைந்தால், அவர்கள் சுரங்கப்பாதையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கான மீட்புப் பணிகளைத் தொடங்க முடியும்.


நேற்று, சுரங்கப்பாதையில் சிக்கிய 16 பேரையும் ITBP பணியாளர்கள் மீட்டனர். ITBP வெளியிட்ட வீடியோவில், ‘ஜோர் லகாகே ஹைஷா’, ‘பஹுத் படியா’, ‘ஷபாஷ்’, ‘ஜோ போலே சோ நிஹால்’, ‘ஜெய் ஹோ’ ஆகிய சொற்றொடர்களை கூறிக்கொண்டே சுரங்கத்தில் சிக்கியிருந்த ஒருவரை அவர்கள் மீட்பதைக் காண முடிந்தது.



ALSO READ: WATCH: குறுகிய சுரங்கத்திலிருந்து ஒரு நபரை மீட்ட ITBP. வைரலாகும் வீடியோ..!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR