முலாயம் சிங் யாதவ், மாயாவதி உள்ளிட்ட முன்னாள் முதல்-மந்திரிகள் அரசு பங்களாவை காலிசெய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முன்னாள் முதல்-மந்திரிகள் அரசு பங்களாக்களை ஆக்கிரமிப்பு செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று கூறியுள்ளது. உ.பி.யில் அரசு பங்களாவை ஆக்கிரமித்தவர்கள் அனைவரும் 2 மாதங்களில் அதனை காலிசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் 2000-ம் ஆண்டில் முதல்-மந்திரி பதவிவகித்த ராஜ்நாத் சிங்கும் பங்களாவை வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. கல்யாண் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் என்.டி. திவாரி என மொத்தம் 6 முன்னாள் முதல்-மந்திரிகளை அரசு பங்களாக்களை காலிசெய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.


இந்த வழக்கை லக்னோவை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று தொடர்ந்தது என்பது குறிப்பிடித்தக்கது.