புதுடெல்லி: விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து பாஜக எம்பி வருண் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். விவசாயிகளின் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி தொடர்ந்து மத்திய அரசை சுற்றி வளைத்து கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகிறார். இதற்கிடையில், மீண்டும் ஒரு முறை குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price) உத்தரவாதத்தைக் குறித்து பேசும் வீடியோவை வருண் காந்தி ட்வீட் செய்துள்ளார். ஏற்கனவே பலமுறை MSP பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வருண் தனது ட்விட்டரில், "எம்எஸ்பிக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் இல்லாத வரை, விவசாயிகள் இதுபோன்ற மண்டிகளில் தொடர்ந்து சுரண்டப்படுவார்கள். இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டு உள்ளார்.


விவசாயிகள் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார்கள்: 
அவர் பகிர்ந்த வீடியோவில், வருண் காந்தி மண்டி ஊழியர்களிடம் கூறுகிறார், "சில நாட்களுக்கு முன்பு ஒரு விவசாயி தனது நெல் பயிருக்கு தீ வைத்தது உங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும். இது பிலிபிட்டிலும் நடந்தது. 17 மாவட்டங்களில் விவசாயியே தனது நெற்பயிர்களுக்கு தீ வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. உலக அளவில் இத சம்பவம் நாட்டுக்கும் உத்தரப்பிரதேசத்துக்கும் ஒரு அவமானகரமான விஷயமாக மாறியுள்ளது. இந்த நேரத்தில் விவசாயி எவ்வளவு கஷ்டத்தில் இருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.


 



நீங்களும் பணவீக்கத்தை எதிர்கொள்கிறீர்கள். நாட்டில் உரத் தட்டுப்பாடு இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். இயற்கை சீற்றத்தால் விவசாயிகள் எப்படி பலியாகி இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். உத்தரகாண்டில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. அதனால் பயிர்கள் சேதமடைந்தன.


விவசாயிகளின் சாபத்திற்கு ஆளாக வேண்டாம்:
இடைத்தரகர்களைப் பற்றி வருண் காந்தி பேசுகையில், "ஒவ்வொரு வேலையிலும் சுரண்டப்படுவதை காண்கிறீர்கள். விவசாயிகள் அறுவடை செய்ததை விற்க மண்டிக்கு வந்தால், ஈரப்பதம் இருக்கிறது, உடைந்து இருக்கிறது, சுத்தமாக இல்லை என்று சொல்லி அதை நிராகரிக்கிறீர்கள். விவசாயியும் வேறு வழியில்லாமல் அதை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அப்புறம் அவர்கள் என்ன செய்வார்கள்.. இறுதியாக அரிசி ஆலை இடைத்தரகளிடம் 11-12 நூறுக்கு விற்றுவிடுகிறார்கள். அதன்பிறகு அதே அரிசி உங்களிடம் வந்து 1940-க்கு விற்கிறார்கள். இந்த இடைத்தரகர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்புடைவர்கள். இதுப்போன்ற சுரண்டல் நாடு முழுவதும் நடைபெறுகிறது. இப்படி உடைந்து கிடக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளின் சாபத்தை ஏன் சம்பாதிக்க வேண்டும் என்றார்.


அரசுக்கு முன் கைகோர்த்துக் கொண்டு இருக்கமாட்டேன்:
வீடியோவின் அடுத்த பகுதியில், வருண் காந்தி மண்டி ஊழியர்களை எச்சரிக்கும் தொனியில் பேசுகிறார். "இந்த நேரத்தில் உங்களை எச்சரிக்க நான் வந்துள்ளேன், இன்று முதல் ஒவ்வொரு பெரிய கொள்முதல் மையத்திலும் எனது பிரதிநிதி ஒருவர் இருப்பார், அவர் எல்லாவற்றையும் பதிவு செய்வார். ஆதாரங்களை சேகரித்து, விவசாயிகளுக்கு எதிராக ஊழல், கொடுமை, சுரண்டல் நடந்திருப்பது தெரியவந்தால், மத்திய அரசுக்கு முன் கைகோர்த்துக் கொண்டு இருக்கமாட்டேன், நேராக கோர்ட்டுக்கு சென்று உங்களையெல்லாம் கைது செய்ய வைப்பேன்" என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR