துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் தனது ஒருமாத சம்பளத்தினை கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநிலத்தில் பெய்த மழையால் மாநிலம் முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு பாதிப்பு கண்டுள்ளது. கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதித்துள்ள கேரள மாநிலத்தில், இதுவரை 370 பேர் இறந்துள்ளதாகவும், சுமார் 8.5 லட்சம் பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.


தற்போது மாநிலத்தில் தேங்கியிருந்து நீரின் அளவு குறைந்து வருகின்றது, எனினும் வெள்ளத்தில் சிக்கிய பலரை மீட்டெடுக்க மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 


கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு உதவும் வகையில் நாடுமுழுவதிலும் இருந்து நிராணப் பொருட்கள், நிதி வழங்கப்பட்டு வருகின்றது. 
இந்நிலையில் தற்போது துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் தனது ஒருமாத சம்பளத்தினை கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



கேரளா வெள்ள பாதிப்பு நிலவம் குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடத்திய அவர், கூட்டத்திற்கு பின்னர் இந்த முடிவினை எடுத்துள்ளார். துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் சுமார் 4 லட்சம் வரையில் மாத சம்பளமாக பெருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.