ஜாலியன்வாலா பாக் படுகொலை, நூற்றாண்டு நினைவு தபால் தலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியப் சுதந்திர போராட்டத்தின் போது கடந்த 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலா பாக் பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூடி அமைதியான வழியில் அறப்போராட்டம் நடத்தினர். 



அப்போதைய பிரிட்டன் ராணுவ ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. 


இந்த துப்பாக்கி சூட்டில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக இயந்திர துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்ட இந்த சம்பவம் இந்திய சுதந்திர போராட்ட வரலாறில் மிகப்பெரிய துயரச் சம்பவமாக கருதப்படுகிறது. இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.



இந்நிலையில், அமிர்தசரஸ் நகரில் இந்த கொடூர சம்பவம் நடந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜாலியன்வாலா பாக் தியாகிகள் சதுக்கத்தில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இன்று அஞ்சலி செலுத்தினார்.


பின்னர் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் தனது கருத்தை பதிவிட்ட துணை ஜனாதிபதி ஜாலியன்வாலா பாக் படுகொலை நூற்றாண்டு நினைவு தபால் தலைகள் மற்றும் 100 ரூபாய் நாணயங்களை வெளியிட்டார்.