மத்திய பிரதேச மாநிலத்தில் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்ததால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நான்கு பேரை தாக்கிய சிறுத்தை சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பின் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று பால்ஹர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து விட்டதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலில் அடிப்டையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் குடியிருப்பில் பதுங்கி இருந்த சிறுத்தையை வலைகள் கட்டி பிடிக்க முயன்றனர். 


அப்போது தப்பி ஓட முயன்ற சிறுத்தை ஆவேசமாக பாய்ந்து வந்து வனத்துறை ஊழியர் ஒருவரை தாக்கியது. பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய சிறுத்தை அருகே இருந்த மற்றொரு குடியிருப்பு பகுதியில் நுழைந்ததால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 



சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பின் சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. இந்த முயற்சியின் போது 2 வனத்துறையினர் ஊழியர்கள் உட்பட 4 ஊழியர்கள் காயமடைந்தனர். 


காயமடைந்தவர்கள் சிகிசைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.