183 கி.மீ. வேகத்தில் சென்ற வந்தே பாரத் ரயில்... துளியும் சிந்தாத தண்ணீரின் வைரல் வீடியோ!
183 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற வந்தே பாரத் ரயிலில் வைத்திருந்த கிளாஸிலிருந்து தண்ணீர் துளியும் சிந்தாமல் இருந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி பல்வேறு கொண்டாட்டங்களையும், முன்னெடுப்புகளையும் அறிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக நாட்டின் முக்கியமான 75 நகரங்களை ஒன்றிணைக்கும் வகையில் வந்தே பாரத் என்ற ரயில் சேவையை தொடங்க அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்த வந்தே பாரத் ரயில் திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வந்தே பாரத் ரயில்கள் முற்றிலுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது தான். மேலும் வந்தே பாரத் ரயில் ஒரு சொகுசு ரயில் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதியுடைய 180 டிகிரி சுழலும் சேர்கள் கொண்ட சிறப்பு அம்சங்கள் பொருந்திய ரயிலாக இந்த வந்தே பாரத் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்
சண்டிகரில், இந்திய ரயில்வே வந்தே பாரத் ரயில்களின் வேக சோதனையைத் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 18, 2022 அன்று, ரயில்கள் வேகப் பரிசோதனைக்காக உருவாக்கப்பட்ட சென்னையின் இன்டக்ரல் கோச் பேக்டரியில் (ஐசிஎஃப்) இருந்து சண்டிகருக்குச் சென்றன. மூன்றாவது வந்தே பாரத் ரயில் டெல்லி மற்றும் சண்டிகர் இடையே இயக்க தயாராகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கோட்டா-நாக்டா பிரிவில் ரயிலின் வேக சோதனை வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் ரயிலின் வேகமானி மணிக்கு 180 கிமீ வேகத்தை எளிதில் எட்டுவதைக் காண முடிகிறது. இந்த வேக சோதனைகளின் தொடக்கத்துடன், இந்திய ரயில்வே நாடு முழுவதும் 75 வந்தே பர்தா ரயில்களை இயக்கும் இலக்கை நோக்கி முன்னேறியுள்ளது.
அதேபோல் மற்றொரு வீடியோவை மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதில் தண்ணீர் கிளாஸ் ஒன்று வேகமாணிக்கு ஆப் உடன் வைத்து படம் பிடிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 183 கி.மீ. வேகத்தில் சென்றுக்கொண்டிருந்த ரயிலில் அந்த கிளாஸில் இருந்த தண்ணீர் துளி கூட கீழே சிந்தாமல் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ