#RIPKarunanidhi: தேசிய தலைவர்கள் ராஜாஜி அரங்கம் வரும் காலநேர அட்டவணை!
கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்த அரசியல் தலைவர்கள் பலரும் சென்னை வரும் நிலையில், தலைவர்கள் எந்த நேரத்தில் சென்னை வந்தடைவர் என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது!
கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்த அரசியல் தலைவர்கள் பலரும் சென்னை வரும் நிலையில், தலைவர்கள் எந்த நேரத்தில் சென்னை வந்தடைவர் என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த ஜூலை 27-ஆம் நாள் நள்ளிரவில் உடல்நிலை கோளாறு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.10 மணியளவில் கலைஞர் காலமானார். இதனையடுத்து மறைந்த தலைவர் கருணாநிதி அவர்களுக்கு தேசிய தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
5 முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்த கலைஞர் அவர்கள் இந்திய அரசியல் தலைவர்களில் முக்கியமானவராக போற்றப்படுகின்றார்.
கலைஞர் அவர்களின் உடலுக்கு தலைவர்கள் பலரும் தேசிய தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்த அரசியல் தலைவர்கள் எந்த நேரத்தில் சென்னை வந்தடைவர் என்பது குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.