ராம் லல்லாவுக்கு பிரசாதமாகும் 1250 கிலோ லட்டு! ஹைதராபாதில் இருந்து அயோத்திக்கு ஊர்வலம்
Ayodhya Ram Mandir Pran Pratishtha: அயோத்தி ராமர் கோவிலில் பிரசாதமாக 1,250 கிலோ எடையுள்ள பிரமாண்ட லட்டு ஒன்றை ஹைதராபாத் ஹோட்டல் ஒன்று தயாரித்துள்ளது
Laddu For Ram Mandir: ராமர் மீதுள்ள அன்பையும் பக்தியையும் வெளிப்படுத்த மக்கள் தனித்துவமான மற்றும் புதுமையான வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழா இன்னும் ஒருசில நாட்களில் நடைபெறவிருக்கும் நிலையில், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலில் படைப்பதற்காக பிரம்மாண்டமனா லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், 1,250 கிலோ எடையுள்ள பிரமாண்ட லட்டு தயாரிக்கப்பட்டு, அயோத்திக்கு அனுப்பப்படும்.
ஐதராபாத்தில் கேட்டரிங் தொழிலை நடத்தி வரும் நாகபூஷன் ரெட்டி இந்த லட்டு தயாரித்துள்ளார். சுமார் 30 பேர் 24 மணி நேரம் தொடர்ந்து உழைத்து 1,250 கிலோ எடை இந்த லட்டுவை தயார் செய்தனர்.
ஸ்ரீ ராம் கேட்டரிங் என்ற பெயரில் 24 ஆண்டுகளாக கேட்டரிங் ப ணியை மேற்கொண்டிருக்கும் நாகபூஷன் ரெட்டி, ராம ஜென்மபூமி கோவிலுக்காக வித்தியாசமாக என்ன செய்யலாம் என்று யோசித்திருக்கிரார். அயோத்தியில் ராமர் கோவில் திறப்புவிழாவுக்கு ஸ்ரீராமருக்கு என்ன பிரசாதம் கொடுக்கலாம் என்று யோசித்து, பூமி பூஜை நாளிலிருந்து கோயில் திறக்கும் நாள் வரை ஒவ்வொரு நாளும் 1 கிலோ லட்டு கொடுக்கலாம் என்ற எண்ணம் தோன்றியதாம்.
மேலும் படிக்க | ராமர் கோவில் வருவது பிரச்னை இல்லை... இதனால் திமுக எதிர்க்கிறது - உதயநிதி பளீச்
ஹைதராபாதில் இருந்து அயோத்திக்கு செல்லும் இந்த பிரமாண்ட லட்டு குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்பட்டுள்ளது. ராமருக்காக தயார் செய்துள்ள1,265 கிலோ லட்டுவை, ஹைதராபாத்தில் இருந்து அயோத்திக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியில் யாத்திரையாக எடுத்துச் செல்லப்படுகிறது. நேற்று (ஜனவரி 17) தேதி ஹைதராபாத்தில் இருந்து பயணத்தை தொடங்கி சாலை வழியாக செல்லும் லட்டு பவனியை வழி நெடுகிலும் மக்கள் பார்த்து ரசிக்கின்றானர்.
சமையல் கலைஞர் துஷாசன்
இந்த உன்னத பணியில் ஈடுபடுவது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக கூறும் சமையல் கலைஞர் துஷாசன், இவ்வளவு பெரிய வேலை கிடைப்பது இதுவே முதல் முறை, அதிலும் ராமர் கோவிலுக்கான பிரசாதம் என்பது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்று மகிழ்ச்சி அடைகிறார். மிகவும் கடின உழைப்புடன், ஆசாரத்துடன் செய்யப்பட்ட இந்த லட்டு, பயணத்தின் போது எப்படியும் கெடாமல் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | Ram temple: அயோத்தி ராமர் கோவிலுக்கு இதுவரை எவ்வளவு நன்கொடை கிடைத்துள்ளது?
இதேபோல, ஹைதராபாத்தில் இருந்து மற்றுமொரு தனித்துவமான படைப்பு அயோத்தி ராமர் கோவிலுக்காக படைக்கப்பட்டுள்ளது. கார் வடிவமைப்பாளர் ஒருவர் அயோத்தி ராமர் கோயிலைப் போன்ற வடிவில் ஒரு காரை உருவாக்கியுள்ளார்.
மேலும் படிக்க - INDIA கூட்டணியால் சிதறும் காங்கிரஸ்... தொகுதி பங்கீட்டால் பலத்த அடி... தீர்வு என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ