உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: கொண்டாடும் ஓரின சேர்க்கையாளர்கள் -வீடியோ
சட்டப்பிரிவு 377-ஐ நீக்கப்பட்டதை அடுத்து, ஓரின சேர்க்கையாளர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
ஓரின சேர்க்கை எதிரான சட்டப்பிரிவு 377-ஐ நீக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு சம்பந்தமான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இறுதி தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில், இந்த சமூகத்தில் பிறந்த அனைவருக்கும் சம உரிமை உண்டு. அதன் அடிப்படையில் ஓரின சேர்க்கையாளர்களுக்கும் சம உரிமை உள்ளது. வயது வந்த ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் உறவுகொள்வது குற்றமாகாது. ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டப்பிரிவு 377 ரத்து செய்யப்படுகிறது. ஓரின சேர்க்கை குற்றமில்லை எனக் கூறி தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை அடுத்து நாடு முழுவதும் உள்ள ஓரின சேர்க்கையாளர்கள், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று இனிப்புக்கள் வழங்கி, தங்கள் மகிச்சியை கொண்டாடி வருகின்றனர். அதில் சில காணொளிகள் இணைக்கப்பட்டு உள்ளது.