வீடியோ: கணவர் மீது உள்ள வெறுப்பால் பச்சிளம் குழந்தையை தாக்கும் மனைவி
உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் கணவர் மீது உள்ள வெறுப்பால் தன்னுடைய குழந்தையை சரமாறியாக தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
இசம்பவம் குறித்து அவரது கணவர் கூறியதாவது:- எனக்கும் எனது மனைவிக்கும் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் என் மீது உள்ள வெறுப்பால் குழந்தை என்று கூட பார்க்காமல் சரமாறியாக தாக்கினார். அதை தடுக்கும் போது என்னையும் அவர் சரமாறியாக தாக்கினார். இதனை ஆதாரத்துடன் நிரூபிக்க எனது வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தினேன். அதில் அவர் குழந்தையை துன்புறுத்தும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளேன். இந்த சம்பவம் காரணமாக நான் மிகவும் மன வருத்தத்தில் உள்ளேன். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளேன்.
வீடியோ:-