இறந்த தாயின் உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து மகன்கள் கொண்டு சென்ற விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பிரதேசம் மாநிலம் மோகங்கர் மாவட்ட மருத்துவமனையில், வாகனம் வழங்காததால் இறந்த தாயின் உடலை தனது மகன்கள் மோட்டார் சைக்கிளில் ஏற்டுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கடந்த சனிக்கிழமை (ஜூலை-7) உடல்நல உடல்நல குறைவால் தனது தாயை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவர்கள் தனது தாயின் இறந்த உடலை எடுத்து செல்ல வாகனம் கேட்டுள்ளனர். மருத்துவமனையில் கொடுக்க மறுத்ததால் அவர்கள் தங்களின் மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றுள்ளனர். 


இந்த வீடியோ இணையத்தில் விரலாக பரவியது. இதன் எதிரொலியாக மேல் கலெக்டர் இதுகுறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் அம்புலன்ஸ் வழங்காததால் மருத்துவமனையில் இருந்து இறந்தவரின் உடலை தோளில் வைத்து வீட்டிற்கு தூக்கிக் கொண்ட அவலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது!