வீடியோ: வேண்டாம் சிறுமிகளுக்கு பால்ய விவாகங்கள்
படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கு அதிர்ச்சியாக இல்லையா? மணமகள் வயது 12. மணமகள் நடுத்தர வயதுக்காரர். இதென்னடா அநியாயம் என்று உங்களுக்கு சொல்லத் தோன்றுகின்றது அல்லவா?
நீங்கள் நினைப்பது போல இல்லை. ஒரு பிரச்சாரத்திற்காக பணம் கொடுத்து நடிக்க வரவழைக்கப்பட்டவர்கள்தான் இவர்கள். லெபனானில் நடந்த இந்தப் படப்பிடிப்பு அகில உலகரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை இதுவரையில் பார்த்துள்ளவர்களுக்கு, இரகசியமாக நடாத்தப்படும் பாலியல் விவாகங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து சேர்த்திருக்கின்றது.
ஏறத்தாழ 15 மில்லியன் குறைந்த வயது பெண்கள் அறுபதுகளிலும் எழுபதுகளிலுமுள்ள ஆண்களை பலவந்தமாகத் திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார்கள் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இப்படியான திருமணங்கள் இந்தியா சிரியா, லெபனான் ஆகிய நாடுகளில் நிறையவே நடந்து வருகின்றன என்கிறார்கள்.
ஐ.நா.சபையின் ஓர் அறிக்கையின்படி 2050ம் ஆண்டளவில்1.2 பில்லியனுக்கு மேற்பட்ட சிறுமிகள் பால்ய விவாகத்திற்குப் பலவந்தப்படுத்தப்ட்டு இருப்பார்கள் என்று சொல்லப்படுகின்றது.
தினமும் 37000 பேர் வரையிலான சிறுமிகளுக்கு பால்ய விவாகங்கள் நடந்து வருகின்றன. நடுத்தரக் குடும்பத்திலிருந்து வரும் 18 வயது பூர்த்தியாகாத பெண்கள் இத்தொகையில் மூன்றிலொரு பகுதியினர். இன்னும் மூன்றிலொரு பகுதியினர் 15 வயது கூட பூர்த்தியாகாத சிறுமிகள்.
ஐ.நா. சபை எடுத்துள்ள தகவல்களின் பிரகாரம் பாலியல் விவாகத்திற்கான வயது நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. மேற்கிந்திய தீவுகளில் 12 வயது பூர்த்தியாகிய சிறுமி திருமணம் செய்ய சட்டம் அனுமதிக்கின்றது. இதுவே சிரியாவில் 13 வயதும். வெனிசூலாவில் சட்டரீதியாக 18 வயதென்றாலும், பெண் சம்மதித்தால் 14 வயததிலும். ஆணுக்கோ 16 வயதிலும் திருமணம் செய்யலாம். கொங்கோ குடியரசில் 15 வயதில் ஒரு பெண் திருமணம் செய்ய முடியும். ஈரானிலோ பெண் 13 வயதிலும் ஆண் 15 வயதிலும் திருமணம் செய்ய முடியும். நீதிபதி அனுமதி கொடுத்தால் ஈராக்கில் 15 வயதாகும்போது திருமணம் அனுமதிக்கப்படுகின்றது.
வீடியோவை பாருங்கள்:-