மும்பை போரிவாலி பகுதியில் நிலத்தடி பைப் லைன் வெடித்ததில் வாகனங்கள் காற்றில் பறந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த செவ்வாய் அன்று இரவு 1 மணியளவில் மும்பையின் போராவாலி பகுதியில், நலத்தடியில் புதைக்கப்பட்ட 6" பைப் லைன் ஒன்று வெடித்து சிதறியது. இதன் காரணமாக பைப்பினில் இருந்த தண்ணீர் மிகுந்த அழுத்தத்துடன் வெளியேற நிலத்திற்கு மேல் இருந்த வாகனங்கள் காற்றில் பறக்க துவங்கியது.


இச்சம்பவத்தால் காற்றில் மேல் நோக்கி எழும்பிய டாடா சுமோ ஒன்றின் வீடியோ அப்பகுதி CCTV கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.



இச்சம்பவத்தின் விவரம் அறிந்த அப்பகுதி கார்பரேசன் நிர்வாகம் உடனடியாக தண்ணீர் வினியோகத்தினை நிறுத்தியுள்ளது. எனினும் தண்ணீரின் வேகம் நெடுநேரத்திற்கு குறைந்தப்பாடில்லை. இந்த சம்பவத்தில் மேலும் 3 வாகனங்கள் சேதமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


பின்னர் Brihanmumbai Municipal Corporation (BMC) ஆனது சேதமடைந்த பைப் லைனினை சரிசெய்துள்ளதாக தகவல்கள் தெரவிக்கின்றன!