மேற்கு வங்கம் பபானிப்பூர் இடைத்தேர்தலில் மம்தா பேனர்ஜீ வெற்றி ..!!!
மேற்கு வங்காளத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் 213 இடங்களில் வென்று திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் தனிப்பட்ட வகையில் நந்திகிராம் தொகுதியில், மம்தா பேனர்ஜீ தோல்வி அடைந்தார்.
மேற்கு வங்காளத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் (West Bengal Elections) 213 இடங்களில் வென்று திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் தனிப்பட்ட வகையில் நந்திகிராம் தொகுதியில், மம்தா பேனர்ஜீ தோல்வி அடைந்தார். திரிணமுல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த சுவேந்து அதிகாரியிடம் 2,000 க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
நந்திகிராம் தோல்வி மம்தாவிற்கான பெரிய அரசியல் அவமானமாக பார்க்கப்பட்டது. 2011, 2016 தேர்தல்களில் பவானிபூரில் இருந்து மம்தா வெற்றிபெற்ற நிலையில், சொந்த தொகுதியான பவானிபூரை விட்டுவிட்டு நந்திகிராமில் மம்தா போட்டியிட்டது தான் காரணம் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், எம் எல் ஏக்கள் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர்கான மம்தா பேனர்ஜீ (Mamata Banerjee), 6 மாத காலத்திற்கும் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்ற நிலையில், இப்போது பவானிபூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
ALSO READ | இடைதேர்தல் அறிவிப்பு; மம்தா பானர்ஜி பபானிபூரில் போட்டியிடக் கூடும் என தகவல்
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், 21 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனக்கு அடுத்த படியாக வந்துள்ள பாஜக போட்டியாளரான பிரியங்கா திப்ரேவாலை விட சுமார் 58000 வாக்குகள் அதிகம் பெற்று பபானிபூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி தனக்கு மிகவும் உத்வேகம் அளித்துள்ளதாக மம்தா பேனர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
திரிணமுல் காங்கிரஸ் முர்ஷிதாபாத்தின் சம்சர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறை நிகழ்வுகளைத் தடுக்க வெற்றி கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை தடை செய்யுமாறு தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
ALSO READ | West Bengal Election Result: கடும் போராட்டத்திற்கு மத்தியில் மம்தா பானர்ஜி தோல்வி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR