நாங்கள் நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை: தேர்தல் ஆணையம்
நம்பகத்தன்மை நிரூபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என மம்தாவுக்கு தேர்தல் ஆணையம் பதில்.
கொல்கத்தா போலீஸ் கமிஷனர் உட்பட ஏழு பேரை இடமாற்றம் செய்ய மேற்கு வங்க அரசிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார்.
அதில், அதிகாரிகள் இடம்மாற்றம் மூலம் தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதைக் பிரதிபலிகிறது. இந்த உத்தரவு உள்நோக்கம் கொண்டது துரதிருஷ்டவசமானது. சமீபகாலமாக தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த அரசியலமைப்புபடி செயல்படுகிறதா அல்லது மத்தியில் பா.ஜ.,வை சமாதானபடுத்தும் வகையில் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும். இந்த இடமாற்றம் மூலம் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்தால், அதற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பேற்குமா? எனக் கூறியுள்ளார்.
மேலும் இதுக்குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் போலீஸ் அதிகாரிகளின் இடமாற்றத்துக்கான காரணம் தெரியும் எனவும் கூறியுள்ளார்.
முதல்வர் மம்தா பானர்ஜியின் கடிதத்திற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், எப்போதும் சுதந்திரமகவும் மற்றும் நியாயமாகவும் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பான நம்பகத்தன்மை நிரூபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை எனக் கூறியுள்ளது.