வாரிசு மற்றும் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தேனியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கரிசல்பட்டி விலக்கில் அதிமுக-பாஜக கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. தேனியில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுகூட்டத்தில் பிரதமர் மோடி அதிமுக-பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.


கூட்டத்தில் பேசிய அவர் தெரிவிக்கையில்., நாடும் நமதே, நாற்பதும் நமதே. முதலில் ஜாலியன் வாலாபாக் 100-வது ஆண்டு நினைவுதினமான இன்று, உயிரிழந்தவர்களுக்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன். அதேவேலையில் நாளை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தமிழக மக்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது பேச்சை துவங்கினார். 


புதிய இந்தியாவை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும் கண்ணியத்துடனும், வளத்துடனும் வாழ்வதை உறுதி செய்யவே புதிய இந்தியா. காங்கிரசும் திமுகவும் மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின்,  ராகுலை பிரதமர் என தெரிவிக்கின்றார். மக்கள் யாரும் அதனால் மகிழ்ச்சி அடையவில்லை, காங்கிரஸ்- திமுக கூட்டணியை  பொருத்தவரை சிறுபிள்ளை தனமாக செயல்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டு பேசினார்.


ஆனால் உங்கள் காவலாளியான நான் உங்களுக்காக சேவை செய்ய காத்திருக்கிறேன். நான் எந்த தீமைக்கும் வழி விடமாட்டேன். தமிழகத்தை வளமான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் திமுக , காங்கிரசுக்கு முடிவு கட்ட வேண்டும். வாரிசு, ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு திமுக- காங்கிரஸ்  கூட்டணி பாதிப்பானது எனவும் தெரிவித்தார்.


வீரமான தேனி மாவட்டத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் என்னைப் பற்றி தெரியும் என தெரிவித்த அவர், காங்கிரஸ் நாட்டை கொள்ளையடிக்கிறது எனவும், பயங்கரவாதிகளுக்கு  எதிராக  நடத்தப்பட்ட ராணுவத்தினரின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து  காங்கிரஸ் கட்சியினர் கேள்வி கேட்கிறார்கள் எனவும் தேசத்தின் அனைத்து பயங்கரவாதிகளையும் ஒழிக்க தொடர்ந்து போராடுவேன் எனவும் கூட்டத்தில் பேசினார்.