டிஜிட்டல் இந்தியா திட்ட தொழில்நுட்பம் மூலம் ஊரக மக்கள் பயனடைந்துள்ளனர் என்று பிரதமர் மோடி கருத்து  தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று அவர் நமோ ஆப் மூலம் பேசியதாவது:- டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கமானது, தொழில்நுட்பத்தின் பலன்கள் அதிகளவு கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டதாகும். இந்த டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் சாதக அம்சங்களை அனைத்து பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தப்படும். 


இதன் தொழில்நுட்பத்தால், ரயில் டிக்கெட்டுகள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய முடிகிறது. மேலும் இதன் கட்டணங்களை இணையம் மூலம் செலுத்த முடிகிறது. இவையெல்லாம் நமக்கு பல வசதிகளை கொண்டு வந்துள்ளது. 


இதன் தொழில்நுட்ப பலன்கள் குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் செல்லாமல், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது என்றார். 



முன்னதாக, பிரதமர் மோடி நேரடியாக மக்களையை தொடர்பு கொள்ள முன்வந்து தனது டிவிட்டார் பக்கத்தில் மக்கள் தங்களுடைய கருத்தை தெரிவிப்பதற்கு பிரதமர் மோடி "என்எம்" என்ற ஆப்பை அறிமுகம் செய்துள்ளார். உங்களுடைய முதல் தகவலை தெரிந்துக் கொள்ள விரும்புகின்றேன் என்று பிரதமர் மோடி ஆப்பையும் தொடர்பையும் இணைத்துள்ளார் டிவிட்டரில்.http://www.narendramodi.in/downloadapp  என்பது குறிபிடத்தக்கது.