மூட நம்பிக்கைக்கு எதிராக நாம் போராட வேண்டும் என மன் கீ பாத் வானொலி உரையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தல்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் நரேந்திர மோடியின் மன் கீ பாத் வானொலி உரை நிகழ்ச்சி 46-வது மாதமாக இன்று ஒலிபரப்பாகிறது. ஜூலை மாதத்தில் பல்வேறு பிரச்னைகள் நடந்துள்ள நிலையில் இன்று பிரதமர் என்ன பேசயிருக்கிறார் என்று ஆவலுடன் இருந்தனர். 


பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுடன் வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார். இந்த உரை நிகழ்ச்சி அகில இந்திய வானொலி உட்பட அனைத்து வானொலிகளும் காலை 11 மணிக்கு ஒலிபரப்பு செய்யப்படும். இந்த நிகழ்ச்சியின் 46-வது மாதமாக இன்று நடைபெற்றது. 


இந்த மாதா மன் கீ பாத்-ல் பிரதமர் மோடி பேசியதாவது...! 


ஜூலை மாதம் வாழ்க்கையில் புது அடியை எடுத்து வைக்கும் இளைஞரகளுக்கு மிகவும் முக்கியம். அவர்களின் நோக்கம், கேள்வியலிருந்து 'கட் ஆப்', வீட்டிலிருந்து விடுதி, பெற்றோர்களின் ஆலோசனையலிருந்து பேராசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும் நேரம் இது. இந்த புதிய அத்தியாயத்தை எனது நண்பர்கள் உற்சாகத்துடனும், மகிழ்சசியுடனும் எதிர்கொள்வர்கள். கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அமைதியாக இருந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். 


கல்லூரி செல்ல தயாராகும் மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். அவர்களின் ஆர்வம் எப்போதும் குறையக்கூடாது. பள்ளியிலிருந்து கல்லூரி செல்வது முக்கியமானது. தொழில்நுட்பத்தில் இளைஞர்கள் மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். 



மேலும், கிராமப்புற வளர்ச்சிக்கான ஸ்மார்ட் செயலியை மேம்படுத்துவதற்கான சவாலை தாம் விடுத்திருந்ததாகவும், இதனை ரேபரேலியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் இருவர் ஏற்றிருப்பதாகவும் தெரிவித்தார். 



இந்தியா மிகப்பரந்து விரிந்த நாடு. சில நேரங்களில் கனமழை மக்களுக்கு பெரிய தொந்தரவுகளை கொடுக்கும். இது, இயற்கையுடன் நாம் முரண்படுவதால் நடக்கிறது. இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளத்தில் சமநிலை நிலவுவதை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.