மூன்று முறை ஜெய் ஹிந்த் மற்றும் வந்தே மாத்திரம் என்று கோஷமிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையை நிறைவு செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



விளையாட்டு முதல் பார்லி., வரை பெண்களின் பங்கு பெருமைக்குரியது. சுப்ரீம் கோர்ட்டில் தற்போது 3 பெண் நீதிபதிகள் உள்ளனர். முத்தலாக் சட்டத்தை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. பெண்கள் நாட்டை பெருமை அடையச் செய்துள்ளனர். முத்தலாக் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை


 



 


 



 



வரி செலுத்தும் அத்தனை இந்தியர்களுக்கும் எனது நன்றிகள். நீங்கள் தான் புதிய திட்டங்களை உருவாக்க உதவுகிறீர்கள், ஒவ்வொரு வரி செலுத்தும் இந்தியரும் ஏழை குடும்பத்தை வாழவைக்கிறார்கள்.



 



 



பிரதமர் மருத்துவ காப்பீடு திட்டம் இந்த வருடம் செப்டம்பர் 25-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும். பிரதான் மந்த்ரி ஜன் ஆரோக்யா அபியான் என்ற பெயரில் காப்பீடு. ஏழைகளும் சிறந்த மருத்துவ சேவையை பெற இந்த திட்டம் உதவும். 


 



 



புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியா மந்தமான நாடு என உலக நாடுகள் எண்ணியிருந்தன. தற்போது இந்தியாவின் தாரக மந்திரம் " reform, perform மற்றும் transform" என மாறிவிட்டது.


 



 



இந்திய பாஸ்போர்ட்டின் வலிமை அதிகரித்துள்ளது. புதிய விமான நிலையங்கள், சாலைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.



விண்வெளி ஆராய்ச்சியில் 4 வது இடத்திற்கு முன்னேறுவதே இலக்கு. 2022-ம் ஆண்டுக்குள் இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் நிறைவேற்றப்படும். மீன் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 2-வது நாடாக திகழ்கிறது


 



 



ஜிஎஸ்டி வரி விதிப்பை கொண்டு வந்ததன் மூல நான் பெருமிதம் கொள்கிறேன், ஜிஎஸ்டி மூலம் வர்த்தக, தொழில் துறைகளின் அபாயகரமான பிரச்சனைகள் நீக்கப்பட்டுள்ளன. பொருளாதாரம் ஆபத்து நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி-ன் வெற்றிக்கு வியாபார சமுதாயத்திற்கு நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 


 



 



ஏழைகளுக்கு கேஸ் இணைப்பு, தூய்மை இந்தியா உள்ளிட்ட திட்டங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளன. புதிய ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ், வீடுகளில் கழிப்பறை உள்ளிட்ட ஏராளமான வசதிகளை கொடுத்துள்ளோம்.



கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா பல துறைகளிலும் அசுர வளர்ச்சி. 2013ம் ஆண்டில் குறைந்த வேகத்தில் கழிவறை கட்டப்படுவது, மின்மயமாக்கல் இருந்தன


 



 



புதிய இந்தியா வேண்டும் என 2014 ல் மக்கள் நம்மை தேர்ந்தெடுத்த்கார்கள், அனைவருக்குமான இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்.


 




அம்பேத்கர் கொடுத்த சட்டம் தான், நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுகிறது. அனைவருக்கும் சமூக நீதி உறுதி.


 




நாட்டின் பல பகுதிகளிலும் நல்ல பருவமழை பெய்துள்ளது இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு துணை நிற்க வேண்டும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்


 



 



இந்த இனிய நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தேசம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக பொருளாதார வலிமையான நாடுகளில் 6 வது இடத்தை நமது நாடு அடைந்துள்ளது. நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களுக்கு தலை வணங்குகிறேன். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை அரசு மீட்டுள்ளது. இந்தியா விரையில் புதிய உயரத்தை எட்டும்.  சமூக நீதிக்காக பாராளுமன்றம் சிற்ப்பாக செயல்பட்டு வருகிறது. ஓ.பி.சி கமிஷன் ஏற்படுத்தப்பட்டதே அதற்கு சாட்சி. இயற்கை சீற்றங்களால் பாதிப்பு அடைந்துள்ள மாநிலங்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும். 


 



 


 



 


 



 


 



 



டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி உரையை துவங்கினார் பிரதமர் மோடி!



 



 


 



 


டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார் பிரதமர் மோடி!


 




காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் டெல்லி செங்கோட்டையில் உள்ள காட்சி.


 




இந்திய நாட்டின் 72-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்காக உரை ஆற்றும் நேரலை வீடியோ தொகுப்பு இதோ:-




டெல்லி செங்கோட்டையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் பிரதமர் மோடி.



செங்கோட்டை வந்தடைந்தார் பிரதமர் மோடி. சற்று நேரத்தில் தேசிய கொடியேற்றி உரையை துவங்குவார்.


 



 


பிரதமர் நரேந்திர மோடி ராஜ்காடில் உள்ள மகாத்மா காந்தி நினைவித்தில் மரியாதை.


 



 


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஹெச். டி.தேவ கௌடா, மத்திய அமைச்சர் ஜி.பி நந்தா மற்றும் பாஜக தலைவர் எல்.கே. அத்வானி செங்கோட்டையில் உள்ள காட்சி.


 



 


பிரதமர் மோடி சற்று நேரத்தில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி நாட்டை மக்களுடன் உரையாற்ற உள்ளார். 


 



 



பிரதமர் மோடி தேசியகொடியேற்ற உள்ள டெல்லி செங்கோட்டையின் புகைப்படம்.


 



 



பிரதமர் மோடி தேசியகொடியேற்ற உள்ள டெல்லி செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


 



 



இந்திய சுதந்திர தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். அதன்படி இன்று இந்திய நாட்டின் 72-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அன்று நாட்டின் பிரதமர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் கொடி ஏற்றுவார். அதன் பின்னர் நாட்டு மக்களுக்காக உரை ஆற்றுவார்.


இதனையடுத்து செங்கோட்டை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் நாடு முழுவதும் எந்த வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் அதிக அளவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இன்று இந்திய நாட்டின் 72-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காலை 7 மணிக்கு செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றுவார். பின்னர் நாட்டு மக்களுக்காக உரை ஆற்றுவார். பிரதமர் நரேந்திர மோடி கொடுக்க இருக்கும் உரையை அதிக மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக கூகுள் மற்றும் யுடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.