கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஒரு ஆற்றில் இருந்து பிடித்த 52 கிலோகிராம் எடையுள்ள ஒரு பெரிய மீனை விற்ற ஒரு வயதான ஏழை பெண்மணி ஒரே இரவில் பணக்காரர் ஆனார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்கத்தின் (West Bengal) சாகர் தீவில் உள்ள சாக்புல்டுபி கிராமத்தில் வசிக்கும் புஷ்பா கார், ஆற்றில் இருந்து ஒரு மிகப் பெரிய மீனை பிடித்தார். இந்த மீன் 300,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


இந்த மீன் உள்ளூர் சந்தையில் ஒரு கிலோவுக்கு 6,200 ரூபாயாக விற்கப்பட்டது.



அந்த மீன் மூலம், மொத்த சந்தையில் 3 லட்ச ரூபாய்க்கும் மேலாக சம்பாதித்ததால், அந்த மீன் தனக்கு ஜாக்பாட்டாக மாறியது என்று புஷ்பா கூறினார்.


ALSO READ: COVID Test-க்கு போன குட்டி காந்தி: இணையத்தில் இதயங்களை வெல்லும் சிறுவனின் படங்கள்!!


“இதுபோன்ற ஒரு மாபெரும் மீனை நான் என் வாழ்க்கையில் பார்த்ததில்லை. இது பெங்காலி மொழியில் ‘போலா’ மீன் (Bhola Fish) என்று அழைக்கப்படுகிறது” என்று அந்த வயதான ஏழைப் பெண்மணி தெரிவித்தார்.


உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, அந்த மீனின் அளவும், அது பெற்றுத் தந்த தொகையும், இரண்டுமே மிக அதிகமானவை. ஆற்றில் இருந்து அந்த மீனை இழுத்து கிராமத்திற்கு கொண்டு வர அந்தப் பெண்மணி கடும் முயற்சி செய்ய வேண்டியிருந்தது. உள்ளூர் மக்களின் உதவியுடன்தான் அவர் மீனை சந்தைக்கு கொண்டு வர முடிந்தது.


அந்த மீன் ஏதாவது ஒரு கப்பலில் மோதி கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஒரு கிராமவாசி கூறினார்.


மறுபுறம், மீன் சிதைவடையத் தொடங்காமல் இருந்திருந்தால், மீனுக்கு இன்னும் அதிக விலை கிடைத்திருக்கும் என உள்ளூர்வாசிகள் கூறினர். ப்ளப்பர் எனப்படும் மீனின் கொழுப்பு அதிக விலைக்கு விற்கப்பட்டு தென்கிழக்கு ஆசியாவில் (Southeast Asia) உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


ALSO READ: Watch Video: ‘எனக்கு வேலை கிடச்சிடுச்சு…..’ குஷியில் ஆட்டம் போடும் பெண்ணின் Video!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR