பாஜவின் மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் மேற்கு வங்கம் ஒரு போதும் அஞ்சி நடுங்காது என அந்த மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019-ம் ஆண்டு தேர்தலிலே மேற்கு வங்காளத்தில் தன்னுடைய பலத்தை காட்ட வேண்டும் என பா.ஜனதா திட்டமிட்டு பணியாற்று வருகிறது. 


மேற்கு வங்காளத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்த பா.ஜனதா தலைவர் அமித்ஷா மம்தா பானர்ஜி அரசையும் கடுமையாக குற்றம் சாட்டினார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீதான தொடர் ஊழல் புகார்களால் வரும் காலத்தில் மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சி அமைக்கும் என சூசகமாக தெரிவித்தார்.


பா.ஜனதாவின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மம்தா பானர்ஜி கூறியதாவது:-


2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில் கருப்பு பணத்தை மீட்பதும் ஒன்று. ஆனால் இன்றளவும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதே  போலத்தான் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படாமல் மத்திய பாஜ அரசு கிடப்பில் போட்டுள்ளது. தற்போது திரிணாமல் காங்கிரசைக் கண்டு பா.ஜனதா தான் அச்சத்தில் உள்ளது.


அதனால் தான் சி.பி.ஐ. வைத்து மிரட்ட பார்க்கிறது. இந்த மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் பணிய மாட்டோம். பயப்படமாட்டோம். மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பாஜ கனவு காண்கிறது. ஆனால் அந்த கனவு நிறை வேறாது. திரிணாமுல் காங்கிரஸ் அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சி திட்டங்களுடன் எந்த வகையிலும் பா.ஜனதா ஆட்சியாளர்கள் போட்டி போட முடியாது. வளர்ச்சி விகிதத்தில் மத்திய பாஜ அரசைக் காட்டிலும் மேற்கு வங்கம் மேலோங்கி இருக்கிறது.


அமித்ஷா எங்களுக்கு சவால் விடுகிறார். நாங்கள் அவரது சவாலை ஏற்றுக் கொள்கிறோம் என்றார்.