ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், கொல்கத்தாவை சேர்ந்த கால்பந்தாட்ட ரசிகர் தனது வீட்டிற்கு அர்ஜன்டினா நாட்டு கொடியின் வண்ணத்தை தீட்டி தனது ஆதரவினை தெரியபடுத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொல்கத்தாவில் டீ கடை நடத்தி வருபவர் சிப் சங்கர் பத்ரா. 1986 ஆம் ஆண்டு, அர்ஜென்டினா கால்பந்து அணி மாரடோனா தலைமையில் உலக கோப்பையைக் கைப்பற்றியதிலிருந்து பத்ரா, மரோடானவின் தீவிர ரசிகராக வளம் வருகின்றார்.


இதன்காரணமாக மாரடோனா விளையாடும் அணியான அர்ஜென்டினா கால்பந்து அணி பத்ராவின் விருப்பமான அணியாக மாறியது. தற்போது பிரபல கால்பந்தாட்டகாரர் மெஸ்ஸியையும் இவருக்கு பிடித்துவிட்டதால் பத்ராவிற்கும் அர்ஜென்டினா அணிக்கும் இடையேயான பந்தம் தீவிரமடைந்துள்ளது.



இந்நிலையில் தற்போது நடைப்பெறவுள்ள கால்பந்து உலக கோப்பை போட்டியில் அர்ஜன்டினா அணிக்கு தனது ஆதரவினை தெரிவிக்கும் வகையில், தனது வீடு முழுவதிற்கு அர்ஜன்டினா அணி கொடியின் வண்ணத்தை பூசியுள்ளார். மேலும் தனது வீட்டுக்குக் கீழேயே அவர் நடத்தி வரும் டீ கடைக்கும் அதே வண்ணத்தை பூசியுள்ளார்.


இந்த ஆண்டு ரஷ்யாவில் நடக்கும் உலக கோப்பைக்குச் சென்று அர்ஜென்டினா விளையாடும் போட்டிகள் அனைத்தையும் நேரில் கண்டுகளிக்க வேண்டும் என்பதே இவரது ஆசையாம். ஆனால் இதுவரை இவரால் 60,000 ரூபாய் மட்டுமே சேமிக்க முடிந்ததுள்ளது. இதனால் இந்த ஆண்டும் இவரது ஆசை நிறைவேராமல் போனது என அவர் குறிப்பிட்டுள்ளார்.