காஷ்மீர் மாநிலம் பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி கூறிய கருத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றுள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீர் யாருக்கும் வேண்டாம், அதனை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷாகித் அப்ரிடி-ன் கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றுள்ளார். 


நேற்று லண்டன் 'மாணவர்கள் நாடாளுமன்றத்தில்' பாக்கிஸ்தான் அரசின் செயல்பாடு அதிருப்பதி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீரை பாக்கிஸ்தான் கேட்கவில்லை, இந்தியாவும் காஷ்மிரை கொடுக்க வேண்டாம். காஷ்மிர் மாநிலத்தை சுதந்திரமாக செயல்படவிடுங்கள் போதும் என தெரிவித்துள்ளார். மேலும் பாக்கிஸ்தான் அரசால் நான்கு மாகாணங்களை கூட சரியாக நிர்வகிக்க இயலாது. இந்நிலையில் காஷ்மிரை கேட்டும் பயனில்லை. காஷ்மீரில் மக்கள் செத்து  கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்பட வேண்டியவர்கள்.


இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ காஷ்மீரை கட்டுப்படுத்தக் கூடாது, மாறாக காஷ்மீர் ஒரு சுதந்திர நாடாக உருவாக அனுமதிக்கப்பட வேண்டும் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷாகித் அப்ரிடி பாகிஸ்தான் அரசுக்கு அறிவுரை கூறினார். 


ஷாகித் அப்ரிடி-ன் இந்தக் கருத்தை வரவேற்றுள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீர் குறித்து சாகித் அப்ரிடி கூறுவது சரி தான் என்று தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங், சொந்த நாட்டையே கையாள முடியாத பாகிஸ்தான் அரசு, காஷ்மீரை எப்படி சமாளிக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியே என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.