புது டெல்லி: நிர்பயா கற்பழிப்பு கொலை வழக்கில் நான்கு குற்றவாளிகளின் தூக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்களா? அல்லது தண்டனை காலம் நீட்டிக்கப்படுமா? என்று சில மணி நேரத்துக்கு இருந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது. நான்கு பேரில் ஒருவரான பவன் குப்தா, குற்றம் நடந்த போது சிறுவனாக இருந்தேன் எனக்கூறிய தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து இன்று மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த நான்கு பேரும் தங்களிடம் உள்ள சட்ட விதிகளை ஒருவர் பின் ஒருவராக பயன்படுத்தி தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் கால தாமதம் செய்வதாக சிலர் குற்றசாட்டி வருகின்றனர். ஆனால் சட்டத்தில் விதிகள் உள்ள போது, அதை குற்றவாளிகள் பயன்படுத்த தடை இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சூழ்நிலையில் நிர்பயா குற்றவாளிகளுக்கு இன்னும் எத்தனை ஆயுள்காலம் உள்ளது? என்பது குறித்து பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முகேஷ் சிங்குக்கு வழி இல்லை:
குற்றவாளி முகேஷ் சிங்கின் அனைத்து விருப்பங்களும் முடிந்துவிட்டன. கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அது உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.


அக்‌ஷய் இரண்டு லைப்-லைன் கொண்டுள்ளார்:
குற்றவாளி அக்‌ஷய் தற்போது இரண்டு லைஃப்லைன் வைத்திருக்கிறார். அவரது மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், அக்‌ஷய் தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை தள்ளுபடி செய்து, கியூரேட்டருக்கான மனு தாக்கல் செய்வதில் எந்த முகாந்திரமும் வழக்கில் இல்லை என்று பெஞ்ச் ஒருமனதாக தீர்ப்பளித்தது. இப்போது அவர் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்யலாம். மேலும் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட மனுவுக்கு எதிராகவும் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம்.


பவனுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன:
குற்றவாளி பவனுக்கு தற்போது மூன்று வாய்ப்புகள் உள்ளன. தற்போது அவர் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவில்லை. கருணை மனு மற்றும் அதை தள்ளுபடி செய்வது ஆகியவற்றின் அடிப்படையில் அவசர் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லலாம்.


வினாய்க்கு இரண்டு லைஃப்லைன்கள் உள்ளன:
வினய் ஷர்மாவின் கருணை மனு தற்போது நிலுவையில் உள்ளது. அவரது மறுசீராய்வு மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


நிர்பயா வழக்கு கடந்த வந்த பாதை:
நிர்பயா வழக்கு ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த சம்பவத்தின் கொடூரத்தைப் பற்றி படித்து அல்லது கேட்டு தெரிந்துக்கொண்ட எவருக்கும் அதிர்ச்சி மற்றும் வேதனையாக இருக்கும். இந்த வழக்கில் மொத்தம் ஆறு குற்றவாளிகள் இருந்தனர். அவர்களில் ஒருவரான ராம் சிங், 2015 ல் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது, மேலும் ஒரு மைனர் என்பதால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் மைனர் குற்றவாளி விடுவிக்கப்பட்டார். மீதமுள்ள நான்கு அதாவது வினய் சர்மா, முகேஷ் சிங், பவன் குப்தா மற்றும் அக்‌ஷய் குமார் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.