இனி என்னவாகும் பழைய நாடாளுமன்ற கட்டடம்? - முழு தகவல்!
Old Parliament Building: புதிய நாடாளுமன்ற கட்டடம் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், தற்போதுவரை செயல்பட்டு வந்த பழைய கட்டடம் என்னவாகும் என்ற கேள்வி தற்போது அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
Old Parliament Building: புதிய நாடாளுமன்ற கட்டடத்தை, பிரதமர் மோடி இன்று காலைா திறந்து வைக்கிறார். ரூ.970 கோடி மதிப்பில் இந்த புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ள நிலையில், இதுவரை செயல்பட்டு வந்த நாடாளுமன்ற கட்டடம் இனி எப்படி பயன்படுத்தப்படும் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
வரலாற்று சாட்சி!
தற்போதுவரை செயல்பட்டு வந்த நாடாளுமன்ற கட்டடம் சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்றமாக செயல்பட்டது. இது தீவிர விவாதங்கள், போராட்டங்கள், எதிர்ப்புகள் மற்றும் உணர்ச்சிபூர்வமான உரையாடல்களின் இல்லமாக இருந்துள்ளது. அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது உட்பட சில வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாக அந்த நாடாளுமன்ற கட்டடம் உள்ளது எனலாம். அதுமட்டுமின்றி, இந்த பழைய கட்டடம், புதிய கட்டடம் கட்டியெழுப்பப்படுவதற்கும் சாட்சியாக இருந்துள்ளது.
நாடாளுமன்ற கட்டடத்தின் செழுமையான பாரம்பரியத்தை பாதுகாப்பு அளிப்பதும், புத்துயிர் அளிப்பதும் என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் ஆகும். தற்போதுவரை செயல்பட்டு வந்த நாடாளுமன்ற கட்டடம், பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. இது முழுமையாக கட்டடப்பட 6 வருடங்கள் எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. 1927இல் இது கட்டி முடிக்கப்பட்டது.
மேலும் படிக்க | புதிய நாடாளுமன்ற கட்டடம்: நீங்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய 10 தகவல்கள் இதோ!
இனி என்னவாகும்?
2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, புதிய நாடாளுமன்ற கட்டடம் தயாரானதும், தற்போது உள்ள பழைய கட்டடம் எவ்வாறு செயல்படும் என்பதற்கு மாநிலங்களவையில் பதிலளித்திருந்தார். ஏற்கனவே உள்ள கட்டடத்தை பழுதுபார்த்து, மாற்றுப் பயன்பாட்டிற்கு வரும்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்த முழு விவரத்தையும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கவில்லை.
ஆனால், பழைய நாடாளுமன்ற கட்டடம் இடிக்கப்படாது என்பது மட்டும் உறுதியாகிறது. தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டடம், நாட்டுக்கான தொல்லியல் சொத்து என்பதால், அது நிச்சயம் பாதுகாக்கப்படும். நாடாளுமன்ற நிகழ்வுகளுக்கு அதிக செயல்பாட்டு இடத்தை வழங்குவதற்கும், புதிய கட்டடத்துடன் இது பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் இது பொருத்தமாக மாற்றியமைக்கப்படும் எனவும் தெரிகிறது.
பாதுகாக்கப்பட வேண்டும்
தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடமும் அருங்காட்சியகமாக மாற்றப்படும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தால் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டாலும், பழைய கட்டடம் இந்தியாவின் வளமான வரலாற்று கடந்த காலத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இது தலைமுறைகளுக்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்பது மட்டும் உறுதி.
புதிய நாடாளுமன்ற கட்டடம் இன்று திறக்கப்படுகிறது. நாடு முழுவதும் நேரலையில் ஒளிப்பரப்பு செய்யப்படும். இந்த புதிய நாடாளுமன்ற மக்களவையில் 888 உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 300 உறுப்பினர்களும் அமர இயலும். பழைய கட்டடத்தில் போதுமான இட வசதியில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை கருத்தில் கொண்டு இந்த புதிய கட்டடம் வடிவமைக்கப்பட்டது.
முக்கோண வடிவத்தில் கட்டடம்
தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் வட்ட வடிவம் என்பது மத்தியப் பிரதேச மாநிலத்தின் மொரேனாவில் உள்ள சௌசத் யோகினி கோயில் போன்று வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை என தெரிகிறது. இந்த புதிய கட்டடம், வட்ட வடிவில் இல்லாமல் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளதால், முந்தைய கட்டடத்தில் இருந்து மிகவும் வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது.
புதிய நாடாளுமன்ற கட்டட வடிவமைப்பாளர் பிமல் படேல் கூறும்போது,"புதிய நாடாளுமன்ற கட்டடம், மூன்று முக்கிய இடங்களைக் கொண்டு, முக்கோண வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்களவை, மாநிலங்களவை மற்றும் ஒரு மத்திய மண்டபம்" என்றார். இருக்கும் முழுமையான இடத்தையும் பயன்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில் புதிய கட்டடம் முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கிய திருவாடுதுறை ஆதீனம்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ