இன்று டெல்லி சட்டசபை கூட்டத்திற்கு வந்த கபில் மிஸ்ராவை அங்கிருந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் சுற்றி வளைத்து அடித்து உதைத்தனர். இச்சம்பவம் மிகுந்த பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையலான அரசு செயல்பட்டு வருகிறது. அண்மையில் ஆம் ஆத்மி கட்சியின் மந்திரியாக இருந்த கபில் மிஸ்ராவை கட்சியில் இருந்தும், மந்திரி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். 


இதனையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டினார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்றும் கூறினார். மேலும் ஆம் ஆத்மி கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டிற்கான ஆதரத்தை சி.பி.ஐ-யுடம் அளித்தார். மேலும் 6 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் ஆம் ஆத்மிக்கு எதிராக நடத்தினார். 


இந்நிலையில் இன்று சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கபில் மிஸ்ராவை அங்கிருந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் சுற்றி வளைத்து அடித்து, உதைத்தனர். பின்னர் அவைக்காவலர்களும், மற்ற உறுப்பினர்களும் வந்து கபில் மிஸ்ராவை மீட்டனர். 


சட்டசபைக்குள்ளே நடைபெற்ற இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.