என்னது? கொரோனாவின் பாதிப்பு இன்னும் இத்தனை ஆண்டுகள் தொடருமா? WHO பகீர் Report!!
உலக சுகாதார அமைப்பு (WHO) உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றில் ஏற்பட்டுளள்ள மிக அதிக ஏற்றம் பற்றி தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றில் ஏற்பட்டுளள்ள மிக அதிக ஏற்றம் பற்றி தெரிவித்துள்ளது. 292,527 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும் என WHO எச்சரித்துள்ளது.
அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் மிகப்பெரிய அதிகரிப்பு இருப்பதாக தினசரி அறிக்கை கூறுகிறது. 6,812 பேர் ஒரே நாளில் இறந்துள்ளார். கொரோனா தொற்றை பொறுத்தவரை இந்த நான்கு நாடுகளும் உலகளாவிய தலைப்புச் செய்திகளில் உள்ளன.
கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட 40 நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களில் அதிக எண்ணிக்கையிலான பதிவுகளை பதிவு செய்துள்ளன. இது முந்தைய வாரத்தில் இருந்ததை விட இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த அறிக்கை உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் தொற்றுநோய் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. பல நாடுகள் இதற்கான பிரத்யேக நடவிக்கைகளை எடுத்து வருகின்றன.
அர்ஜென்டினா லாக்டௌனை நீட்டித்துள்ளது.
பிரான்சில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 1,300 –க்கும் மேல் புதிய நோயாளிகள்பதிவு.
கிரீசில் மே மாதத்தை ஒப்பிடுகையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.
ஸ்பெயினில் பெரிய அளவில் தொற்று அதிகரித்துள்ளது.
ஹாங்காங் கொரோனா தொற்று காரணமாக தேர்தலை ஒத்திவைத்துள்ளது.
பிலிப்பைன்சில் கடந்த இரண்டு நாட்களில் இதுவரையில்லாத அளவு அதிகபட்ச தினசரி அதிகரிப்பு.
இந்தோனேசியாவில் 2,000 க்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிப்பு.
ரஷ்யாவில் 5,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுநோய் பதிவு. அங்கு மொத்த எண்ணிக்கை 840,000 ஐ நெருங்குகிறது
வடக்கு இங்கிலாந்தில் லாக்டௌன் கடினமாக்கப்படது. 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,400 பேர் இறந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் விளைவுகள் குறித்து WHO-வின் எச்சரிக்கை
உலகளாவிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று மிக ஆபத்தான் பேரழிவாகும். இதன் விளைவுகள் எதிர்காலத்தில் நீடிக்கும் என்று WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
"இந்தத் தொற்றுநோய் ஒரு நூற்றாண்டில் ஒரு முறை வரும் சுகாதார நெருக்கடி. இதன் விளைவுகள் பல தசாப்தங்களுக்கு உணரப்படும்" என்று டெட்ரோஸ் WHO இன் அவசரக் குழுவின் கூட்டத்தில் கூறினார்.
ALSO READ: August 01: உலக அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம்
சில நாடுகளில் முன்பை விட அதிகமாக தொற்று அதிகரித்து வருவதால், டெட்ரோஸ் எச்சரித்தார். அவர் கூறுகையில், "கடுமையான தொற்றால் பாதிக்கப்படுள்ள பகுதிகளில் கூட, இன்னும் உலகின் பெரும்பாலான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது." என்று தெரிவித்தார்.
அனைத்து நாடுகளும் இதன் தீவிரத்தை உணர்ந்து செயல்படுவது உலக மக்கள் நலனுக்கு நல்லது என்றும் WHO தலைவர் மேலும் கூறினார்.