ரூ.500, 1000 பணமதிப்பு ரத்து நடவடிக்கை பற்றிய முடிவு ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததா என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் 8-ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று பிரதமர் அறிவித்தார். இந்த அறிவிப்பை எதிர்த்து நாடு முழுவதும் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு முன் இன்று விசாரணை தொடங்கியது. மத்திய அரசின் சார்பில் வழக்கறிஞர் ரோத்தகி ஆஜராகி வாதாடினார். அப்போது நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். ரூ.500, 1000 பணமதிப்பு ரத்து நடவடிக்கை பற்றிய முடிவு ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததா என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கும் கொள்கை முடிவு எப்போது எடுக்கப்பட்டது எனவும் சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.  


மத்திய அரசு சொன்னபடி வாடிக்கையாளருக்கு வாரம் ரூ.24 ஆயிரம் வங்கிகள் வழங்காதது ஏன் என மத்திய அரசின் வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்களிடம் ஏன் வாங்கவில்லை எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் பணமதிப்பிழப்பு அறிவிப்பால் கூட்டுறவு வங்கிகள் முடங்கியுள்ளது பற்றி மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும் டிசம்பர் 14ம் தேதி இபிந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வுக்கு மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும் என நீதிபதிகள் தகவல் தெரிவித்தனர்