பழைய கார்கள் சாலையில் இல்லாதபோது 44 வயதான ஜெட் விமானங்களை ஏன் பறக்க விட வேண்டும் என இந்திய விமானப்படைத் தலைவர் பி.எஸ்.தனோவா கேள்வி எழுப்பியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய விமானப்படைத் தலைவர் பி.எஸ்.தனோவா செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியதாவது, இந்த விண்டேஜின் கார்களைக் கூட யாரும் ஓட்டாதபோது, 44 ஆண்டுகளுக்கும் பழமையான விமானங்களை இந்தியா ஏன் பறக்கவிடுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விமான தலைமை மார்ஷல் தனோவா 1973-74 ஆம் ஆண்டு படையில் சேர்க்கப்பட்ட MiG-21 போர் விமானத்தை குறிப்பிடுகிறார்.


இந்திய விமானப்படையில் MiG-21 ரக விமானங்கள் 1973 ஆம் ஆண்டு முதல் சேவையில் உள்ளன. இவை விமானப்படை உபயோகத்திற்கு வந்து கிட்டத்தட்ட 44 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த MiG-21 ரக விமானம் குறித்து இந்திய விமானப்படை தளபதி பிஎஸ் தனோவா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,  MiG-21 ரக விமானத்தை நாம் 44 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். இவ்வளவு ஆண்டுகாலமாக பழைய காரை கூட யாரும் பயன்படுத்த மாட்டார்கள். இதனால், இந்த ரக விமானம் இந்தாண்டுடன் விமானப்படையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும்.


ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நாங்கள் பல துணைக் கூட்டங்களை சுதேசித்திருக்கிறோம், புதுமைப்படுத்தியுள்ளோம் மற்றும் உலகெங்கிலும் உற்பத்தியில்லாமல் போய்விட்ட பல கூறுகளின் இறக்குமதி மாற்றீட்டைச் செய்துள்ளோம். எனவும் அவர் குறிப்பிட்டார். 


இந்த விமானத்தின் பாகங்களில் 95 சதவிகிதம் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால் இத்தனை ஆண்டு காலம் இவ்விமானம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த விமானத்தை தயாரித்த ரஷ்ய நாடே தற்போது இதனை பயன்படுத்துவதில்லை. எனினும் இந்தியாவில் இதற்கான பாகங்கள் இருப்பதால் நாம் பயன்படுத்தி வருகிறோம். 2006 ஆம் ஆண்டு 116 MiG-21 ரக விமானங்கள் MiG-21 பைசன் (Bison) விமானமாக தரம் உயர்த்தப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.


கடந்த 40 ஆண்டுகளில் மிக்-21 ரக விமானங்கள் நிறைய விபத்துகளை சந்தித்துள்ளது. அதாவது கடந்த 40 ஆண்டுகளில் மொத்தமுள்ள 872 விமானங்களில் பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள் விபத்துக்குள் ஆனதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.