Kerala News In Tamil: சமூக வலைதளங்களில் ஃபேக் ஐடி பயன்படுத்தி போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரமுகர்களை ஹனி ட்ராப்பில் சிக்க வைத்த 'அஸ்வதி அச்சு' என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பல லட்சம் மோசடி செய்தவர் ஒரு முதியவரால் சிக்கியது எப்படி? வாருங்கள் முழுக்கதையும் அறிந்துக்கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அஸ்வதி அச்சு, அனுஸ்ரீ, அனு என்ற பெயர்களில் சமூக வலைதளங்களில் போலி ஐடி மூலம் போலீஸாரையே ஏமாற்றி கதற வைத்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைல் கூறி 68 வயது முதியவரிடம் 40,000 ரூபாய் பணம் பறித்துள்ளார். தான் ஏமாந்ததை அறிந்த அந்த முதியவர் சற்றும் யோசிக்காமல் போலீசிடம் சென்றுள்ளார். அப்போது தான் அஸ்வதி அச்சு வசமாக சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைதான பின்பு தான் பல திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகின. 


அஸ்வதியிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரை தனது ஹனி ட்ராப் மூலம் சிக்க வைத்து பணம் பறித்துள்ளார். ஆனாலும் போலீசில் சிக்காமல் இருந்து வந்த அஸ்வதி இந்த முறை வசமாக சிக்கி கைதாகியுள்ளார். சமூக வலைதளங்களில் போலி பெயர்களில், பல இளம் பெண்களின் அழகிய புகைப்படங்களை பயன்படுத்தி பல முக்கிய பிரமுகர்களின் ஆசைகளை தூண்டி அவர்களை காதலிப்பதாகக் கூறி பணம் பறித்து வந்துள்ளார். 


மேலும் படிக்க: குழந்தைகளின் உணவில் மலம்... ஆதிக்க சாதியினர் அடாவடி - நடவடிக்கை எடுக்குமா அரசு?



இதற்கு முன்பு கொல்லத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி செய்ததாக இந்த பெண் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். கேரளா தலைநகரில் உள்ள ஒரு முக்கிய அரசியல் தலைவருடன் அஸ்வதி நடத்திய உரையாடலின் ஆடியோ வெளிவந்துள்ளது. 


இந்த சூழலில் முதியவர் ஒருவரிடம் பழகி வந்த இவர், 40,000 ரூபாய் கடனைத் தீர்த்த பிறகுதான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்றுக் கூறி பணத்தை பெற்றுள்ளார். பணம் கொடுத்த அடுத்த நாள் திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறி பணத்தை வாங்கியதும் கம்பி நீட்டியுள்ளார் அஸ்வதி. 


இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட முதியவர் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து, சைபர் செல் உதவியுடன் அந்த பெண்ணை அவர் வாடகைக்கு தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பூவார்  போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே  கொல்லம்  எஸ்.ஐ இந்த பெண் மீது அளித்த  புகாரிலும்  இவர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அஸ்வதி அந்த எஸ்.ஐ-யையும் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பணம் பறித்துள்ளார்.  ஏமாற்றப்பட்ட போலீஸ்காரர் அளித்த புகாரில், ஃபேஸ்புக் மூலம் பழகி சந்தித்து நட்பாகி, பலமுறை சுமார் 1 லட்சம் ரூபாய் வரை ஆடியோக்களை வைத்து மிரட்டி பணம் பெற்றதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: செல்போனால் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்.. பெற்றோர்களே உஷார்



கொல்லம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த இந்த பெண் அஸ்வதி, பல ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். அதிகமாக போலீஸ்காரர்களை வலையில் சிக்க வைத்து அவர்களுடன் நட்பாக பழகுவதும், தொடர்நது ஆபாசமான சாட்டிங்-ல் ஈடுபடுவதும் ,தொடர்நது சாட்டிங் ஆதாரங்களை வைத்து அவர்களை மிரட்டி பணம் பறிப்பதையும் பல ஆண்டுகளாக செய்து வந்துள்ளார். இவரது லிஸ்டில் சில முக்கிய அரசியல் பிரமுகர்களும் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் அழகாக இருக்கும் இளம் பெண்களின் புகைப்படங்களை எடுத்து ஃபேக் ஐடி உருவாக்கி இந்த ஏமாற்று வேலையை இவர் செய்துள்ளார். கிட்டதட்ட ராங்கி படத்தில் வருவதைப்போல போலி புகைப்படம் வைத்து பலரையும் ஏமாற்றியுள்ளார்.  


பலரும்  வெளியே தெரிந்தால் வேலை போய்விடும் என பயந்து புகார் அளிக்க முன் வரவில்லை. இந்நிலையில் போலீசார் உட்பட பல முக்கிய பிரமுகர்களை தனது ஹனி டிராப்பில் சிக்க வைத்து போலீஸாருக்கே தண்ணீர் காட்டி வந்த பெண் தற்போது போலீசாரின் வலையில் சிக்கி கொண்டுள்ளார். இவரிடம் ஏமாந்த ஆண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம் என்றும், அவர்கள் ரகசியம் காக்கப்பட்டும் என்றும் கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க: சினிமா பாடல் மெட்டில் விழிப்புணர்வு அசத்தும் போக்குவரத்து காவலர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ