"என்னை எதிர்க்க முடியாத காரணத்தால் தாயாரை விமர்சிக்கிறது காங்கிரஸ் என பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்தியப் பிரதேச மாநிலத்தில் வரும் 28-ஆம் தேதி சட்டமன்ற தேரத்ல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆளும் பாஜக கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி இன்று விதிஷா பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.


பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர்., எனது குடும்ப உறுப்பினர்களை காங்கிரஸ் விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது, நான் ஒருபோது அவர்களின் குடும்பத்தாரை விமர்சித்ததது இல்லை, அவர்கள் வகித்த பதவியினை தான் விமர்சித்து இருக்கிறேன், ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சியினர் எனது குடும்ப உறுப்பினர்களை பற்றி விமர்சித்து வருகின்றனர். என்னை எதிர்க்க தைரியம் இல்லாத காரணத்தாலே தாயாரை விமர்சிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக இந்தூரில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் உத்தரப் பிரதேச மாநில தலைவர் ராஜ் பப்பர் பிரசாரத்தில் ஈடுப்பட்டார்., அப்போது அவர், இந்திய ரூபாயின் மதிப்பானது பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் வயதுக்கு இணையாக சரிவடைந்து விட்டது என்று விமர்சித்திருந்தார். 


ராஜ் பப்பரின் இந்த கருத்திற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ராஜ் பப்பர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியிருந்தது.


இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநில பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமது கண்டனத்தை தெரிவித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியில் இருப்போருக்கு என்னை எதிர்ப்பதற்கு சக்தி கிடையாது. கடந்த 17 முதல் 18 ஆண்டுகளாக, ஒவ்வொரு வேளையிலும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்துள்ளேன். காங்கிரஸ் கட்சியை நான் தோற்கடித்துள்ளேன். ஆனால் தற்போது எனது தாயாரை காங்கிரஸ் அரசியலுக்குள் இழுக்கிறது.


நாட்டை பல ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, மோடியை எதிர்க்கும் விஷயத்தில் மட்டும் தொடர்ந்து தோல்வியை தழுவி வருகின்றது. அதனால் தற்போது மோடியின் தாயாரை அவமதிக்கிறது. 


மத்தியில் இருக்கும் எனது அரசுக்கு, 125 கோடி மக்கள்தான் மேலிடமாகும். எனது அரசை வீட்டிலிருக்கும் மேடம் யாரும், ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குவதில்லை.


கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை ஆட்சியிலிருந்த மேடத்தின் ஆட்சி, வசதிபடைத்தவர்களுக்கு கடன் அளித்து, வங்கிகளின் பெட்டகத்தை காலியாக்கியது. ஆனால் தற்போது மத்தியில் ஆட்சியிலிருக்கும் எனது அரசால் கடந்த 2016-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் 3 லட்சம் போலி நிறுவனங்கள் மூடப்பட்டன என வெளிப்படையாக காங்கிரஸ் கட்சி தலைமையினை சாடினார்.