ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான அடிப்படை கேள்விகளுக்கு கூட பிரதமர் மோடி மௌனம் காக்கிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்ற வளாகத்தில், மக்களவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது... 


ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், முதலில் விலை தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார், ஆனால் தற்போது அத்தகவல்கள் ரகசியமானவை என தெரிவித்துவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.



முதலில் விலை தெரியப்படுத்தப்படும் எனவும், பிறகு ரகசியம் என கூறிய இரண்டு அறிக்கைகளில் எது உன்மையானது என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.


  • இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு துறை, அமைச்சரவை கமிட்டியிடம் கேட்டார்களா?, 

  • ஒப்பந்தம் எச்.ஏ.எல்-லிடம் இருந்து பறிக்கப்பட்டது ஏன்?, 

  • அப்படி பறிக்கப்பட்ட ஒப்பந்தம் தொழில் அதிபரிடம் கொடுக்கப்பட்டது ஏன்? 


என்பன உள்ளிட்ட 3 கேள்விகளுக்கு பிரதமர் மோடிக்கு பதிலளித்தாக வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.



மேலும், நாடாளுமன்ற இரு அவைகளிலும் நீண்ட நேரம் உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான அடிப்படை கேள்விகளுக்கு கூட ஏன் பதிலளிக்க மறுக்கின்றார், எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்!