கணவன் தலையுடன் காவல் நிலையம் வந்த மனைவி
குடும்பப் பிரச்சினை காரணமாக கணவனை மனைவி கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரேனிகுண்டா கிராமத்தில் சேர்ந்த தம்பதிகளுக்கு ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையில் கணவனை மனைவி கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரேனிகுண்டா கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் ரவிச்சந்திரன் மற்றும் வசுந்தரா (வயது 50). இந்த தம்பதியருக்கு 20 வயது மகன் உள்ளார், அவர் மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக ரவிச்சந்திரன் மற்றும் வசுந்தரா இடையே (கணவன் - மனைவி) சண்டை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று தீடீரென அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
ALSO READ | சிறைச்சாலையில் செல்போன்: கைதிகளுக்கு அதிகாரிகளே உதவினார்களா?
இதைத்தொடர்ந்து ரவிச்சந்திரனை வசுந்தரா கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். ரவிச்சந்திரன் இறந்ததை அடுத்து வசுந்தரா வீட்டை விட்டு தலையுடன் வெளியே வந்துள்ளார். இரத்தக் கறைகளுடன் வசுந்தரா தெருவில் நடந்து சென்றதை கண்டு பயந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வசுந்தரா தன் கணவனை கழுத்தை அறுத்து கொன்றதை கண்டறிந்துள்ளனர். வசுந்தராவை கைது செய்த போலீசார் வசுந்தரா மனநலம் பாதித்தவர் என்றும் அவர்கள் இருவருக்கும் 20 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டனர். மேலும் கொலை செய்த பெண் ஒரு இல்லத்தரசி என்றும் ஆண் பிளாஸ்டிக் பெட்டி தயாரிக்கும் யூனிட்டை நடத்தி வந்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
குடும்பப் பிரச்சினை காரணமாக கணவனை மனைவி கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ | கோவையில் தொடரும் கஞ்சா வேட்டை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR