காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவுக்கு ஆதரவு கொடுக்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் அமைச்சர் அலி அமின் கந்தாபூர் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆகஸ்ட் 05 ஆம் தேதி அரசியலமைப்பின் 370-வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் திரும்ப பெற்றது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் மேற்கொள்வதற்கு முன்பே, ஜம்மு-காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இன்டர்நெட் மற்றும் தகவல் தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. இதற்க்கு பலரும் தனகளது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். 


இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்தும். அந்த நாடுகள் பாகிஸ்தானின் எதிரிகளாக கருதப்படும் என பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இது குறித்து அமைச்சர் அலி அமின் கந்தபுர் கூறுகையில்... காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பதற்றத்தை அதிகப்படுத்தினால், பாகிஸ்தான் நிச்சயம் போரை துவக்கும். அப்போது இந்தியாவிற்கு ஆதரவாக நிற்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும். பாகிஸ்தான் அந்த நாடுகளை எதிரியாக கருதவில்லை. ஆனால், இந்தியாவிற்கு ஆதரவு அளித்தால், அந்த நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்றார். 



காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை எனில் போர் களத்தில் தான் இருநாடுகளும் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்திருந்ததை தொடர்ந்து, தற்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கித் பல்திஸ்தானின் அமைச்சர் அலி அமின் கந்தாபூர், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்ற இந்தியாவின் முடிவுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் பாகிஸ்தானின் ஏவுகணைகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியாகியுள்ளது.


இவரை தொடர்ந்து, அந்நாட்டின் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமது மற்றும் தகவல்துறை அமைச்சர் சௌதரி ஃபவாத் ஹுசைன் இருவரும் இவரின் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.