அயோத்யாவில் ராமர் சிலை கண்டிப்பாக  நிறுவப்படும் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடுமுழுவதும் தீபாவளிப்பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அயோத்யாவில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆதித்யநாத், உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் சிலை அமைக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். தீபாவளியை முன்னிட்டு யோகி ஆதித்யநாத் அயோத்தியில் ராமஜென்ம பூமிக்குச் சென்றார். அங்குள்ள கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளிலும் யோகி பங்கேற்றார்.


அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமர் பிறந்த அயோத்தியில் அவருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட உள்ளதாகக் கூறினார். அயோத்தியில் ராமர் சிலை வைக்க 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் ஒரு இடத்தில் ராமர் சிலை வைக்கப்படும் என்றும் யோகி தெரிவித்தார்.


அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தில் மீண்டும் ராமர் கோவில் கட்டப்படுவது உறுதி என்றும் அவர் கூறினார். மேலும் அயோத்தியை மாடல் நகரமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் யோகி ஆதித்யநாதத் தெரிவித்தார். 


கடந்த சில நாட்களுக்கு முன்னர் அலகாபாத் என்றிருந்த பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றி உத்தரவு பிறப்பித்தார் ஆதித்யநாத். இந்நிலையில் அயோத்யா பெயர் மாற்றம் குறித்து நேற்று அறிவிப்பை வெளியிட்டார்.