காங்கிரஸ் ஒரு அடிமை வம்சக் கட்சியாக மாறியுள்ளது -ரஞ்சித் சாவர்க்கர்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் `என் பெயர் சாவர்க்கர் இல்லை` குறித்த சர்ச்சை மற்றொரு சூடான திருப்பத்தை எடுத்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 'என் பெயர் சாவர்க்கர் இல்லை' குறித்த சர்ச்சை மற்றொரு சூடான திருப்பத்தை எடுத்துள்ளது.
இந்துத்துவா பிரபலம் வீர் சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் ஞாயிற்றுக்கிழமை ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்குத் தாக்கல் செய்வதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பாரத் பச்சாவ் (இந்தியாவை காப்பாற்றுங்கள்) பேரணியை காங்கிரஸ் ஏற்பாடு செய்தது. இந்த பேரணியில் ராகுல் காந்தி பேசுகையில் தான் "ரேப் இன் இந்தியா" விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் எனவும், மன்னிப்பு கேட்க நான் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய பிரதமர் மோடி தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்திற்கு தற்போது இந்துதுவா கட்சிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்., வீர் சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சிவசேனாவின் சித்தாந்தத்தின் முதுகெலும்பாக இந்துத்துவா இருப்பதாகக் கூறி, காந்திக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க தாக்கரேவிடம் கோருவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"சிவசேனா அரசியல் தொடர்பாக கட்சி நெறிமுறைகளைத் தேர்வு செய்ய வேண்டும், காங்கிரசுடனான கூட்டணியை கட்சி முடிவுக்கு கொண்டுவர வேண்டும்" என்றும் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
"நாம் நமது சுதந்திர போராட்ட வீரர்களையும் தலைவர்களையும் அவமதிக்கக் கூடாது. சிவசேனாவை கூட்டணியில் வைத்துக்கொண்டு காங்கிரஸ் சாவர்க்கரை அவமதிக்கிறது. சிவசேனா தங்கள் அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர்களை நீக்கிவிட்டு சிறுபான்மை அரசாங்கத்தை நடத்த வேண்டும், பாஜக அவர்களுக்கு எதிராக வாக்களிக்கப் போவதில்லை" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
காந்தியின் கருத்துக்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு தனது கருத்தினை ரஞ்சித் சாவர்க்கர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில்., "ராகுலின் பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல என்பது ஒரு நல்ல விஷயம். அவரது பெயர் சாவர்க்கர் என்றால், நாங்கள் வெட்கத்துடன் எங்கள் முகங்களை மறைக்க வேண்டியிருக்கும்." என தெரிவித்தார்.
வலுவான வார்த்தைகளில் ரஞ்சித் சாவர்க்கர் தெரிவிக்கையில்., முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆங்கிலேயருக்கு விசுவாசத்தினை காட்டினார். நேரு அப்போதைய இங்கிலாந்து மன்னர் ஆறாம் ஜார்ஜ் மன்னரிடம் தனது விசுவாசத்தை சத்தியம் செய்தார். ஆங்கிலேயர்களுக்கு விசுவாசியாக இருந்த ஒருவர் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஒரு வருடம் முன்னதாக தனது குடும்பப் பெயரை (நேரு) கைவிட்டதற்காக தனது பாட்டி மற்றும் முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்திக்கு ராகுல் காந்தி நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "ஜவஹர்லால் நேரு ஒரு பிரிட்டிஷ் விசுவாசியாக இருந்தார், 1946-ஆம் ஆண்டில் அவர் துணை ராயல் கவுன்சிலில் ஒரு அமைச்சராகவும் இருந்தார், அதிகாரத்திற்கான பேராசையில் பணியாற்ற ஏற்றுக்கொண்டார். அப்போதைய இங்கிலாந்தின் மன்னர் ஜார்ஜ் ஆறாம் மன்னருக்கு விசுவாசத்தை வெளிப்படுத்தினார், மேலும் அவருக்கு விசுவாசமாக இருக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டார். ஆனால் சாவர்க்கர் இதைப் பற்றி ஒருபோதும் கனவு காணவில்லை" என தெரிவித்தார்.
வீர் சாவர்க்கரின் பேரன் மேலும் கூறுகையில், "நேருஜி தனது அடிமை உறுதிமொழியில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்தார், ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும், அவர் 1950-ஆம் ஆண்டு வரை ஜார்ஜ் மன்னரை இந்தியப் பேரரசராகக் கருதி, அவரிடமிருந்து அனுமதி பெற்றார். ஏப்ரல் 1949-இல் ராஜாஜி கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டபோதும், ஜார்ஜ் மன்னரின் அனுமதி எடுக்கப்பட்டது. அத்தகையவர்கள் மட்டுமே சாவர்க்கர் போன்ற தேசபக்தர்களை அவமதிக்க முடியும்! "
"சாவர்க்கரின் இறுதிச் சடங்கிற்கு பீரங்கி வழங்க அரசாங்கம் மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் நேருஜியின் அன்பு நண்பர் லேடி மவுண்ட்பேட்டன் இறந்தபோது, இந்திய கடற்படை போர்க்கப்பல் 'த்ரிஷுல்' அங்கு அனுப்பப்பட்டது. சுதந்திரத்திற்கு முந்தைய காங்கிரஸ் தற்போது இல்லை, அது ஒரு அடிமை வம்சக் கட்சியாக மாறியுள்ளது" என்றும் தெரிவித்துள்ளார்.