COVID-19 சிகிச்சைக்கு HCQ ஏற்றுமதி செய்ய அனுமதித்த மோடிக்கு நன்றி: டிரம்ப்
மருந்துப்பொருள் ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்கிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இந்த உதவியை மறக்க முடியாது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உருக்கம்!!
மருந்துப்பொருள் ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்கிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இந்த உதவியை மறக்க முடியாது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உருக்கம்!!
உலகையே அசுருத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ளது. அந்நாட்டில் 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தோற்றுக்கு அமெரிக்காவில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உள்பட நாங்கள் ஆர்டர் செய்த சில மருந்து பொருட்களை வழங்க அனுமதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், வெளிநாடுகளுக்கு மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா தடைவிதித்தது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க பிரதமர் டிரம்ப் கடந்த 7 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசுகையில், '' அமெரிக்கா ஆர்டர் செய்த மருந்துகளை அனுப்ப பிரதமர் மோடி அனுமதிக்கவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படலாம்’’ என இந்தியாவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் கூறினார்.
இதை தொடர்ந்து, கொரோனா வைரஸ் தோற்றுக்கு சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து பொருட்களை வழங்க அனுமதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்த சில மணி நேரத்திலேயே மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோகுளோரோ குயின் உள்பட்ட 22 வகையான மருந்துப்பொருட்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தியா நீக்கியுள்ளது.
இதை தொடர்ந்து, இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்து டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''அசாதாரண நேரங்களில் நண்பர்களுக்கு இடையே மிக நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் விவகாரத்தில் முடிவெடுத்த இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. இதை உதவியை எங்களால் மறக்க முடியாது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் உறுதியாக உள்ள இந்தியாவுக்கும், இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி'' என அவர் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியைப் பாராட்டும் அதிபர் டிரம்பின் வார்த்தைகள், HCQயுவை ஓரளவு ஏற்றுமதி செய்வதற்கான முடிவை இந்திய அரசு எடுத்துள்ளது என்பதற்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது, ஆனால் அமெரிக்காவின் சர்வதேச வர்த்தகத்தில் "பதிலடி கொடுக்கும் அச்சுறுத்தலின்" கீழ் அல்ல.
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக ஒரு தடுப்பூசியை உருவாக்க அமெரிக்க சுகாதார அதிகாரிகள், பயோடெக் நிறுவனமான மாடர்னாவுடன் இணைந்து விரைவாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மார்ச் 16 ஆம் தேதி தடுப்பூசி மூலம் அவர்கள் முதல் மனித சோதனைகளைத் தொடங்கினர்.