நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் முதல் நாளிலேயே, மக்களவையில்  வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இன்று தொடங்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 23ம் தேதிவரை நடைபெற உள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், விவசாய அமைப்புகள் கடந்த ஓர் ஆண்டாக போராடி வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் தலையிட்டு இந்த சட்டங்களை நிறுத்தி வைத்தது. இந்நிலையில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த வாரம் அறிவித்தார்.


இதையடுத்து, இந்த 3 வேளான் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதாவை தாக்கல் செய்ய கடந்த வாரம் மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.


மக்களவையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்  மசோதா நிறைவேறியவுடன் மாநிலங்களவையிலும் இந்த மசோதாவை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் குளிர்கால கூட்டத்தொடரில், கிரிப்டோ கரன்ஸி, டிஜிட்டல் கரன்ஸியை ஒழுங்குமுறைப்படுத்தும் மசோதா, திவால் சட்டத்தின் 2-வது திருத்த மசோதா, மின்சாரத் திருத்த மசோதா ஆகிய மசோதக்களூம் தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


ALSO READ | நாடாளுமன்றத்தில் திமுக எழுப்பவுள்ள 5 பிரச்சனைகள் - டி.ஆர்.பாலு தகவல்


முன்னதாக, நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக, நேற்று நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் 31 கட்சிகளை சேர்ந்த 42 உறுப்பினர்கள் பங்கெற்றனர்


ALSO READ | திரைப்படத்துறை மீதான விமர்சனங்களை பாஜகவினர் தவிர்க்க வேண்டும்- அண்ணாமலை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR