பாகிஸ்தானை தாண்டி பலிக்காத சீனாவின் நரித் தந்திரம்: ஒரு அலசல்
இஸ்லாமாபாத் மற்றும் பியோங்யாங் தாண்டி சீனாவின் நரி தந்திரம் எங்கும் பலிக்கவில்லை
நியூயார்க், அமெரிக்கா: பாகிஸ்தான் மற்றும் வட கொரியாவைத் தாண்டி சீனாவின் நரித் தந்திரங்கள் பலிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். இஸ்லாமாபாத் மற்றும் பியோங்யாங் ஆகியவை விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ சீனாவுக்கு அடிபணிந்தன.
”கொரோனா தொற்று பரவல் பாதிப்பிற்காக, சீனாவிடம் அபராதம் வசூலிக்க வாய்ப்பிற்காக காத்திருக்கும் இந்த நிலையிலும், சீன அரசு இன்னும் அதன் விரிவாக்க கொள்கையை கைவிட்டதாக தெரியவில்லை. சீனாவினால், ஆதாயம் அடைந்த நாடுகள் கூட சீனவிடம் இருந்து விலகியே இருக்கின்றன. தற்போது புதிய நரி தந்திரம் எதுவும் சீனாவின் கையில் இல்லையோ ? " என தி சிட்டிசன்(The Citizen) பத்திரிகையில் வெளியிடப்பட்ட தனது கருத்துத் தொகுப்பில் லெப்டினென்ட் ஜெனரல் போபிந்தர் சிங் கேள்வி எழுப்பினார்.
ALSO READ | நமக்குள்ள சண்டை எதுக்கு.. பேசி தீர்க்கலாம் வாங்க…….தூது விடுகிறது சீனா..!!!
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் புதுச்சேரியின் முன்னாள் துணை நிலை ஆளுநரான போபிந்தர் சிங், சீனா தனது நரி தந்திரத்தினால், நெறிமுறைகள் இன்றி, வெட்கமின்றி, எல்லையை விரிபடுத்தும் பேராசையில் எந்த அளவிற்கும் கீழே இறங்கி செயல்படும் தன்மை கொண்டது சீனா என்று கூறினார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒன் பெல்ட் ஒன் ரோட் முன்முயற்சி, முத்து சரம் துறைமுக திட்டம் போன்ற திட்டங்களின் மூலம் தனது ஆதிக்கத்தை விரிவு படுத்த சீனா திட்டமிட்டது என்று சிங் கூறினார். பசிபிக் தீவு நாடுகளில், நேபாளம், மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு கடன்களை வாரிக் கொடுத்து தனக்கு அடிமையாக்க திட்டம் தீட்டிய, சீன அதிபர் ஜி ஜின்பிங்கின், இதன் மூலம் தான் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க நினைத்தது.
பாகிஸ்தானுக்கு கடன்களை அள்ளிக்கொடுத்து, அதனை தனக்கு அடிமையாக்கி, அதன் மூலம் இந்தியாவிற்கு குடைச்சல் கொடுத்து வந்தது.
சீனா வற்புறுத்தல், மிரட்டல், உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு, கடனை அள்ளிக் கொடுத்தல் மற்றும் இராணுவ தந்திரம் ஆகியவற்றால், அண்டை நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள இன்று வரை முயற்சித்து வருகிறது.
ஆனால் இப்போது டிராகன் எல்லை மீறிய செயல்களால், தானே வலையில் மாட்டிக் கொண்டு விட்டதா? என இன்று உலகம் இதற்கான பதில்களைத் தேடுகிறது. சீன வைரஸ் காரணமாக, உலத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனா மீது அனைத்து நாடுகளும் கோபமாக உள்ளன என போபிந்தர் சிங் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இது கிழக்கு லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் சீனா நடந்து கொண்டது பெரும் மோசடி நடவடிக்கை. முன்னதாக வியட்நாமிய மீன்பிடி படகு ஒன்று, தனது நாட்டின் கடல் எல்லைக்குள் வந்து விட்டதாக கூறி, அதனை மூழ்கடித்தது.
கோவிட் -19 நெருக்கடியினால் உலகம் திணறிக் கொண்டிருக்கும் போது, தென் சீன கடலின் பல பகுதிகளை ஆக்கிரமிக்க முயன்று, அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.
ALSO READ | கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தாராவி எடுத்துக்காட்டாக விளங்குகிறது: WHO புகழாரம்
சீனா பிராந்தியத்தில் அச்சம் மற்றும் பிளவுக்கான சூழ்நிலையை உருவாக்குகிறது என, தன் பங்குக்கு ஆஸ்திரேலியாவும், சீனாவை எதிர்ப்பதில், உலக நாடுகளுடன் கை கோர்த்துள்ளது.
கடந்த வாரம் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison ) சீனா சைபர் தாக்குதல் நடத்துகிறது என புகார் செய்தார்.
சீன அரசின் மோசடிகளை பற்றி நன்கு அறிந்திருந்தாலும், விரக்தி மற்றும் நிர்பந்தம் காரணமாக பல நாடுகளை விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ டிராகனுக்கு அடிபணிந்து நடக்கிறது என்று சிங் அந்த கட்டிரையில் எழுதினார்.
சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் கொடுமைபடுத்தப்படுகின்றனர் என்பது பாகிஸ்தான் நன்கு அறிந்த விஷயம். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அதைப் பற்றி வாயை திறக்க முடியாது.
சீன "முதலீடுகளை" அனுமதித்தத்ற்கான விலை என்ன என்பதை இலங்கையும் உணர்ந்தது, ஏனெனில் அதன் ஹம்பாந்தோட்டா துறைமுகத்தின் கட்டுப்பாட்டை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட வேண்டியிருந்தது.
சீனா உலகத்தை இன்றே, தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற, பேராசையினால், தான் விரித்த வலையில் தானே சிக்கிக் கொண்டுள்ளது.
சீனாவை பழி வாங்கியே ஆக வேண்டும் என்ற அமெரிக்கா ஒரு முடிவோடு உள்ள நிலையில், அந்த நெருக்குதல் மற்றும் அழுத்தம் காரணமாக சீனா தவறான முடிவுகளை எடுக்கிறதோ என போபிந்தர் சிங் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.