Crime News In India: ராஜஸ்தான் மாநிலம்  பாரத்பூர் பகுதியில் வசிப்பவர் கயான் சிங் - ஹேமலதா தம்பதியர். இவர்களுக்கு 8 வயதில் கோலு என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு திடீரென சிறுவன் கோலு காணாமல் போயுள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை ஊர் முழுவதும் தேடியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிடப்பில் போடப்பட்ட வழக்கு


காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் மூன்று நாட்களுக்கு கழித்து சந்தன்புரா என்ற பகுதியில் உள்ள காய்கறி தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த சிறுவன் கோலுவின் உடலை காவல்துறையினர் தோண்டி எடுத்துள்ளனர்.


இதனையடுத்து இவ்வழக்கில் தனிப்படை அமைத்து கொலையாளியை தேடும் பணியில் போலீசார் இறங்கினர். இதில் பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்த பின்பும்  கூட போலீசாரால் கொலையாளியை நெருங்க முடியவில்லை. இதனால் அந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது.


மேலும் படிக்க | ரூ.25 கோடி லாட்டரி சீட்டை தொலைத்த நண்பன்... கொலையில் முடிந்த மோதல்


இருப்பினும், கொலையாளியை கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுத்தே ஆக வேண்டும் என நினைத்த கோலுவின் தந்தை கயான் சிங் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்ததையடுத்து நீதிமன்றம் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. 


திடுக்கிடும் தகவல்கள்


பின்னர் பயானா வட்ட அதிகாரி நித்தி ராஜ் தலைமையில் ஒரு சிறப்பு தனிப்படை அமைத்து முழுவீச்சில் வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த முறை பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தது. குறிப்பாக கோலுவின் தாய் ஹேமலதாவுக்கு, அவரது 24 வயதான அண்ணன் மகன் கிருஷ்ண காந்துடன் திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரியவந்தது. ஆரம்பத்தில் கொலை செய்ததை ஒப்புக் கொள்ளாத இவர்கள் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையால் ஒப்புக் கொண்டனர்.


உண்மையை ஒப்புக்கொண்ட தாய்


இதன் பின்னர் இருவரும் உண்மையை சொல்லியுள்ளனர். அதில் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி ஹேமலதாவும், கிருஷ்ணகாந்தும் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்துவிட்டதாகவும் இது கணவன் கயான் சிங்கிற்கு தெரிந்துவிட்டால் பிரச்னையாகிவிடும் என நினைத்த அவர்கள் சிறுவன் கோலுவை செல்போன் சார்ஜ் செய்யும் கேபிளால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.


சிறையில் அடைத்த காவல்துறை


அதன்பின்னர், அவனின் உடலை அருகில் உள்ள காய்கறி தோட்டத்தில் புதைத்ததாக கூறியுள்ளனர். தொடர்ந்து போலிசாருக்கும் சந்தேகம் வராத வகையில் தாங்களும் காணாமல் போன சிறுவனை தேடியதாகவும் சிறுவனின் சடலம் கண்டுபிடுக்கப்பட்ட பின்னரும் தங்கள் மீது சந்தேகம் வராத படி பார்த்து கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (செப். 21) ஹேமலதாவையும்  கிருஷ்ணகாந்தையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். திருமணத்தை மீறிய உறவால் பெற்ற தாயே மகனை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | இந்த ஆண்டு தீபாவளிக்கும் சரவெடி கிடைக்காது! பேரியம் பயன்பாட்டுக்கு தடை விதித்த SC


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR