மும்பை ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் அழகான குழந்தையை பெற்றெடுத்துள்ளார்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை: தாதர் ரயில் நிலையத்தில் 21 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவர் ரயில் நிலையத்திலேயே அழகான குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மும்பையில் உள்ள தாதர் ரயில் நிலையம் எப்போது பரபரப்புடன் மக்கள் கூட்டத்தை கொண்டுள்ள ஒரு இடம். இந்நிலையில், இன்று காலை அந்த ரயில் நிலையத்தில் மேலும் ரரபரப்பை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கீதா தீபக் வாக்ரே என்ற  21 வயதுடைய நிறைமாத கர்ப்பிணி பெண் தாதர் ரயில் நிலைத்திற்கு வந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவருக்கு த்டீர் என பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.   


இதையடுத்து, உடனடியாக அவர் காவல்துறையினரால் ரயில்வே-ன் 24x7 மருத்துவ உதவி குழுவினர் உதவியை நாடியுள்ளனர். அவர்கள் அந்த பெண்ணுக்கு அங்கேயே பிரசவம் பார்த்துள்ளனர். இதையடுத்து, இவருக்கு ஒரு அழகான குழந்தையை பெற்றுள்ளார். பின்னர் அவர் பிறந்த குழந்தையும் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, மேலும் கவனிப்பு மற்றும் மருத்துவ உதவிகளுக்கு மாற்றப்பட்டன.


இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், தாயும், சேயும் நலமுடன் இருப்பதாகவும். அவர்களை மருத்துவக்குழு துடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.