மகாராஷ்டிராவில் வனப்பகுதியில் புலி தாக்கி, பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மாநிலம் சந்த்ரப்பூர் மாவட்டத்தில் உள்ள பெண்ட்ரூ (Pendru) என்ற வனப்பகுதிக்கு பெண் ஒருவர், விறகு சேகரிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, வனப்பகுதியில் சுற்றித்திரிந்த புலி தாக்கியதில், அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 


இதையடுத்து, வணபகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற பெண் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் வனப்பகுதியில் சென்றுள்ளனர். அப்போது அந்த பெண் புலி தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. அந்த பெண் குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 



இதை தொடர்ந்து, அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.