குர்கான் பகுதியில் உள்ள ஒரு பப்பில் பணிபுரியும் பெண்ணிடம் இளைஞர் ஒருவர் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த சக பெண்கள் அவரை பொதுமக்கள் முன்னிலையில் செருப்பால் அடித்து விரட்டியனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2 மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரம் ஆட்டோவில் சென்ற பெண்ணை பலாத்காரம் செய் 3 பேர் கொண்ட கும்பல் அவரது 9 மாத பெண் குழந்தையும் வீசியெறிந்து கொன்றது. 


இந்நிலையில் குர்கானில் உள்ள பப் ஊழியரிடம் குடிபோதையில் இளைஞர் ஒருவர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு குருகானில் பணிபுரியும் சில பெண்கள் எம்ஜி சாலையில் பேருந்துக்காக நின்றுக் கொண்டிருந்தனர். அப்போது குடி போதையில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் அங்கு நின்றிருந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார்.  


இதனைக் கண்ட அவருடன் பணிபுரியும் சக ஊழியர்கள் அந்த நபரை பொதுமக்கள் முன்னிலையில் செருப்பால் அடித்து விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள துணை ஆணையர், பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து புகார் அளித்தால் உடனடியாக எப்ஃஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.