சனிக்கிழமை இன்று தொடங்கும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உலகத் தலைவர்கள் பலர் வெள்ளிக்கிழமை புது தில்லி வந்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் ஏற்கனவே டெல்லிக்கு வந்து தங்கியுள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டுக்கு முன்பாகவே பிரதமர் நரேந்திர மோடி வங்காளதேசம் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நடத்தினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

G20 தலைவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள பிரபலமான உணவுகளுடன் நேர்த்தியான விருந்தோம்பல் அளிக்கப்படும். இன்றைய விருந்தில் உலகத் தலைவர்கள் என்ன சாப்பிடுவார்கள் என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம். 


1. சாலட்


டோஸ் செய்யப்பட்ட இந்திய பச்சை சாலட்
பாஸ்தா மற்றும் வேகவைத்த காய்கறி சாலட்
கொண்டைக்கடலை சுண்டல்


மேலும் படிக்க | சீனாவின் ஆக்ரமிப்பை கண்டிக்க வேண்டும்! ஜி20யில் விவாதம் கோரி போராடும் திபெத் அகதிகள்


2. சூப்
வறுத்த பாதாம் மற்றும் காய்கறி குழம்பு


3. சைவம் 


பனீர் லபப்தார் (உத்தர பிரதேச உணவு)
உருளைக்கிழங்கு லியோனைஸ்
சப்ஸ் கோர்மா (ஆந்திராவின் ஒரு உணவு)
காஜு மாதர் மகானா
அராபியாட்டா சாஸில் பென்னே


4. பருப்பு


ஜாவர் தால் தட்கா (உத்தர பிரதேச உணவு)


5. அரிசி


பயஸ் ஜீரா கி புலாவ் (பஞ்சாபி உணவு)


6. இந்திய ரொட்டி


தந்தூரி ரொட்டி, பட்டர் நான், குல்சா


7. மற்ற உணவுகள்


வெள்ளரிக்காய்


புளி மற்றும் பேரீச்சம்பழ சட்னி


கலப்பு ஊறுகாய்
சாதாரண தயிர்


7. இனிப்பு


குட்டு மால்புவா (உத்தர பிரதேச சிறப்பு)
கேசர் பிஸ்தா ராஸ்மலை (ஒடிசா ஸ்பெஷல்)
சூடான வால்நட் மற்றும் இஞ்சி புட்டு
ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்
கருப்பட்டி ஐஸ்கிரீம்


இரண்டு நாள் உச்சி மாநாட்டில் இந்த சிறப்பு உணவுகள் பரிமாறப்படும். தலைவர்களுக்கு வழங்கப்படும் உணவுக்கான கருப்பொருள் "வசுதைவ குடும்பகம்" என்ற சமஸ்கிருத பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.


மேலும் படிக்க | முதல் முறையாக இந்தியா வந்துள்ள ஜோ பிடன்! பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ