உத்திர பிரதேச மாநிலம் பிரியாகராஜில் வரும் ஜனவரி 15-ஆம் நாள் நடைபெறவுள்ள கும்பமேளா விழாவிற்காக ₹4300 ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரியாகராஜ் என பெர்மாற்றம் செய்யப்பட்ட அலகாபாத்தின் முதல் கும்பமேளா வரும் ஜனவரி 15-ஆம் நாள் வெகு விமர்சையாக நடைப்பெறவுள்ளது. எதிர்வரும் விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்மரமாக நடைப்பெற்று வருகிறது. 


உலக புகழ் பெற்ற இந்த விழாவில் கலந்துக்கொள்ள சுமார் 5000 வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தாயகம் வரும் மக்களுக்கு ஏதுவாக உலகின் மிக பெறிய தற்காலிக குடியிறுப்பு கிராமத்தை உருவாக்க உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவுசெய்துள்ளார். தற்காலிகமாக அமைக்கப்படும் இந்த கிராமத்திற்கு 250 கிமி சாலை உள்பட 22 பாளங்கள் அமைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் பிரியாகராஜ் நகரை ஒளிர் விளக்குகளால் அலங்கரிக்க 40,000 LED விளக்கு வடிவமைப்புகள் திட்டமிடப்பட்டுள்ளது.


முன்னதாக இந்த கும்பமேளா-வின் பாதுகாப்பிற்காக சுமார் 20,000 சைவ காவலர்கள் பயன்படுத்துவர் என அம்மாநில ஆணையர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு கும்பமேளாவிற்கு 12 கோடி பக்தர்கள் வரை வருகை புரிவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அலைகடலாய் திரண்டு வரும் பக்தர்களை கட்டுப்படுத்த இந்த காவலர்கள் முழுவீச்சில் செயல்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரியகராஜில் கும்ப மேளா வரும் ஜனவரி 15-ஆம் தேதி துவங்கி மார்ச் 4-ஆம் நாள் வரை நடைபெறுகிறது. உலகின் மிகப்பெரிய கலாச்சார மற்றும் சமய நிகழ்வு என பிரகடனம் செய்யப்படும் கும்ப மேளா UNESCO-வின் உலக பாரம்பரியத் தகுதியைப் பெற்றுள்ளது. 'மனிதகுலத்தின் அருவமான கலாச்சார மரபு' பட்டியலில் இந்த கும்பமேளா சேர்க்கப்பட்டுள்ளது. இந்தாண்டு நடைபெறும் கும்பமேளாவில் 192 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


கும்ப மேளாவின் போது, லட்சக்கணக்கான பக்தர்கள் நிர்வாணமாக, சாம்பல் பூசிய தோற்றத்துடன் பூஜைகள் செய்து கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகளில் குளித்து புண்ணியம் அடைவர். கங்கை நீரில் குளித்தல் தான் செய்த பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை கொண்டு மக்கள் இந்த கும்பமேளாவில் பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.