சுயமரியாதையை இழந்துவிட்டு வாழ்வதில் என்ன பயன்... பதக்கங்கள் கங்கையில் வீசிவோம் -சாக்ஷி மாலிக்
Wrestlers Protest: பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக டெல்லி ஜந்தா் மந்தரில் போராடி வந்த மல்யுத்த வீரர்கள் பல்வேறு போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் விசப் போவதாக அறிவித்துள்ளதால், டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Wrestlers Protest In Delhi: மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்கள் தங்கள் பதக்கங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை ஆற்றில் வீச முடிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள் டெல்லி இந்தியா கேட் பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
சுயமரியாதையை இழந்துவிட்டு வாழ்வதில் என்ன பயன் -சாக்ஷி மாலிக்
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் ட்விட்டரில், நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் எங்கள் துயரங்களை கேட்கவில்லை என கடுமையாக சாடிய அவர், "எங்களை எங்கள் மகள்கள் என்று அழைக்கும் பிரதமர் மோடி, மல்யுத்த வீரர்களின் மீதான தனது அக்கறையைக் கொஞ்சம் கூட காட்டவில்லை, மாறாக அவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு அழைத்துள்ளார். அவர் பிரகாசமான வெள்ளை உடையில் புகைப்படங்களுக்கு கூட போஸ் கொடுத்தார். நாங்கள் கறை படிந்துள்ளோம். எங்கள் கழுத்துகளை அலங்கரிக்கும் பதக்கங்களுக்கு இனிமேலும் எந்த அர்த்தமும் இல்லை என நினைக்கிறேன். சுயமரியாதையை இழந்துவிட்டு வாழ்வதில் என்ன பயன் இருக்கிறது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
பதக்கங்களை கங்கையில் ஆற்றில் வீசிவோம்:
மல்யுத்த வீரர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "ஹரித்வாரில் இன்று மாலை 6 மணிக்கு ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் நாங்கள் வென்ற பதக்கங்களை கங்கையில் ஆற்றில் வீசப் போகிறோம். இந்த பதக்கங்கள்தான் எங்கள் உயிர். இதனை ஆற்றில் வீசிவிட்டு நாங்கள் வாழ்வதற்கு எந்த அர்த்தமும் இல்லை. இந்தியா கேட் பகுதியில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்" எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க - சர்வாதிகாரம் ஆரம்பித்துவிட்டதா? சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் ஆவேசம்
பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீது பாலியல் புகார்:
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் பாலியல் துன்புறுத்தல் புகார்களை தெரிவித்துள்ளனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தா் மந்தரில் மல்யுத்த வீரா்கள் ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இனி ஜந்தர் மந்தரில் போராட்டம் செய்ய அனுமதி கிடையாது:
கடந்த 29 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி வீரர்கள் பேரணியாக செல்ல முயற்சித்தனர். அவர்களுக்கு அனுமதி அளிக்க டெல்லி போலீசார் மறுத்ததால், இருதரப்புக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மல்யுத்த வீரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு தேசிய தலைநகரில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இனி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடந்த அனுமதி கிடையாது. ஜந்தர் மந்தரை தவிர டெல்லியில் வேற எந்த பகுதியிலும் போராட்டம் நடத்த அனுமதி வாங்கிக்கொள்ளலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு:
மல்யுத்த வீரர்களுக்கு அபினவ் பிந்த்ரா மற்றும் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட விளையாட்டுத் துறையை சேர்ந்தவர்களும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ