Year Ender 2024, Top 5 Incidents Of India: 2024ஆம் ஆண்டு இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டு எனலாம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் மூன்றாவது முறையாக மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஜம்மு காஷ்மீரில் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதுமட்டுமின்றி, பல்வேறு நிகழ்வுகள், சம்பவங்கள் நடந்தாலும் அதிக கவனத்தை ஈர்த்த டாப் 5 விஷயங்களை இங்கு காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வயநாடு நிலச்சரிவு


கேரளாவின் வயநாட்டில் ஜூலை 30ஆம் தேதி அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 420 பேர் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், பலரும் காணாமல் போன சம்பவமும் நடந்தது. நிலச்சரிவு மற்றும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடுமையான சேதம் ஏற்பட்டது. இந்த சேதத்தின் காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அவை நாட்டு மக்களின் மனதை உலுக்கின. 


தேர்தல்கள்


2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களும் நடைபெற்றன. மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைத்தது. 
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி கைப்பற்றிய 16 தொகுதிகள், ஐக்கிய ஜனதா தளம் கைப்பற்றிய 12 தொகுதிகள்தான் இக்கூட்டணி ஆட்சி அமைய கைக்கொடுத்தது. தொடர்ந்து, 234 தொகுதிகளை எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கைப்பற்றியது. இதன்மூலம் வலுவான எதிர்க்கட்சி கூட்டணியும் அமைந்தது.


ஹரியானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்றன. ஜம்மு காஷ்மீரிலும் 10 ஆண்டுகளுக்கு பின் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.


ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. சிக்கிம் மாநிலத்திலும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியும் மீண்டும் அங்கு ஆட்சியை கைப்பற்றியது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து தெலுங்கு தேசம் - பாஜக - ஜனசேனா கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது.


ஹரியானாவில் ஆச்சர்யமளிக்கும் வகையில் பாஜகவே மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. அதேபோல் மகாராஷ்டிரா, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சியை கைப்பற்றியது.


மேலும் படிக்க | Rewind 2024: இந்திய அணி சந்தித்த மெகா தோல்விகளும்... பெரிய பின்னடைவுகளும்...


கொல்கத்தா பெண் டாக்டர் வன்கொடுமை - கொலை


கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியின் மருத்துவ மாணவி ஆக. 9ஆம் தேதி அன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இது நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி தொடர் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டது நிச்சயம் யாராலும் மறக்க இயலாது.


அம்பானி வீட்டு திருமணம்


ஆகாஷ் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணம் மும்பை ஜியோ கன்வென்ஷனல் சென்டரில் கடந்த ஜூலை மாதம் மூன்று நாள்கள் நடைபெற்றது.  சுமார் ரூ.5 ஆயிரம் கோடி அளவில் திருமணம் மட்டுமன்றி திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகளும், திருமணத்திற்கு பிந்தைய நிகழ்வுகளும் பெரும் கவனத்தை ஈர்த்தன. பாலிவுட், ஹாலிவுட் நடிகர்கள், சர்வதேச பிரபலங்கள், தொழில் அதிபர்கள், கோடீஸ்வரர்கள், அரசியல் தலைவர்கள், உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 


ரத்தன் டாடா மறைவு


கடந்த அக். 9ஆம் தேதி அன்று டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா காலமானார். இது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 86 வயதில் ரத்தன் டாடா உயிரிழந்த நிலையில், அவரின் வளர்ச்சி, சமூக நோக்கு, மனிதாபிமான அடிப்படையிலான செயல்பாடுகள் ஆகியவை மக்களால் நினைவுக்கூரப்பட்டது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க | 3வது குழந்தையை பிரசவித்த மனைவி... சாலையில் எரிந்தபடி ஓடிய கொடூரம்.. என்ன நடந்தது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ