புதுடெல்லி: அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் மற்றும் ஓமிக்ரானின் அச்சுறுத்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மஞ்சள் அலர்ட் அமல்படுத்தப்பட்டுள்ளது. மஞ்சள் அலர்ட் அமல்படுத்தப்பட்டதையடுத்து, டெல்லியிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இப்போது டெல்லியில் என்ன செயல்படும் என்ன செயல்படாது என்பதைக் குறித்து முழு விவரத்தையும் இங்கு கொடுத்துள்ளோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புது டெல்லியில் எது செயல்படும் எது செயல்படாது:


- மால்கள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள கடைகள் ஒற்றைப்படை-இரட்டைப்படை அடிப்படையில் திறக்கப்படும்.


- பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும்.


- கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


- உள்ளூரில் கடை திறக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் கோவிட் விதிகளை பின்பற்ற வேண்டும்.


- 50 சதவீத அடிப்படையில் வாரச்சந்தைகள் செயல்பட அனுமதிக்கப்படும்.


- ஒவ்வொரு மாநகராட்சியிலும் ஒரு வாரச்சந்தை மட்டுமே கூட அனுமதிக்கப்படும்.


- உணவகங்கள் 50 சதவீத திறனுடன் இயங்க அனுமதிக்கப்படும். உணவகங்கள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் திறந்திருக்கும்.


- 50 சதவீத திறனுடன் காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை பார்கள் திறக்கப்படும்


- ஹோட்டல்கள் திறக்க அனுமதிக்கப்படும். ஆனால் கேளிக்கை அரங்குகள் செயல்பட அனுமதி இல்லை.


- ஆடிட்டோரியம் மற்றும் மண்டபம் செயல்பட அனுமதியில்லை.


- திரையரங்குகள், மல்டிபிளக்ஸ்கள் மற்றும் மால்கள் மூடப்பட்டிருக்கும்.


- பொழுதுபோக்கு மற்றும் பூங்காக்கள் மூடப்பட்டிருக்கும்.


- மத்திய அரசு அலுவலகங்கள் இந்திய அரசின் உத்தரவுப்படி இயங்கும்.


- 50 சதவீத ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள்.


- ஆட்டோ, இ-ரிக்‌ஷா, டாக்ஸி மற்றும் சைக்கிள் ரிக்‌ஷாவில் 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.


- தேசிய அல்லது சர்வதேச விளையாட்டு போட்டுகளை நடக்க அனுமதி அளித்தாலும், விளையாட்டு வளாகங்கள், மைதானங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.


- திருமணம் மற்றும் இறுதிச் சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.


- சமூக, அரசியல், மத, திருவிழா மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான நடவடிக்கைகள் தடை செய்யப்படும் (இந்தத் தடை இன்னும் அமலில் உள்ளது).


- மத ஸ்தலங்கள் திறந்திருக்கும் ஆனால் பக்தர்களின் நுழைவு தடைசெய்யப்படும்.


- இரவு ஊரடங்கு சட்டம் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.


- டெல்லி மெட்ரோ 50 சதவீத இருக்கை வசதியுடன் இயங்கும், நின்று கொண்டு பயணிக்க அனுமதிக்கப்படாது.


- ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் 50 சதவீதம் இருக்கை வசதியுடன் இயக்கப்படும்.


டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக கோவிட்-19 தொற்று விகிதம் 0.5 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை 290 பேருக்கும், திங்கள்கிழமை 331 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR